Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்துக்கொள்வதால் உண்டாகும் பயன்கள் !!

Bitter Gourd
, திங்கள், 13 ஜூன் 2022 (09:47 IST)
பாகற்காயில் வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.


பாகற்காய் சாறு டைப் 2 நீரிழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பயன்படுகிறது. கணைய உண்டாகும் புற்றுநோய் செல்களை அழிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

பாகற்காயையோ, அல்லது அதன் இலைகளையோ வெந்நீரில் வேகவைத்து தினந்தோறும் சாப்பிட்டால், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். மேலும் குடற்புழுக்களை வெளியேற்றும்.

பாகற்காயில் பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இருக்கிறது. இது நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். அதே போல வாழைப்பழத்தில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது.

பாகற்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்சிடன்ட்கள், கண்களை பாதிப்பில் இருந்து பாதுகாக்கும். பாகற்காய், உணவுப் பையிலுள்ள பூச்சிகளை கொல்லும். பசியைத் தூண்டும், பித்தத்தைத் தணிக்கும்.

பாகற்காயில் நார்ச்சத்து அதிகமுள்ளதால், செரிமானத்துக்கு மிகவும் உதவுகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, ரத்தத்தை சுத்திகரிக்கிறது. பாகற்காயை, அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால்,  இருமல், இரைப்பு, மூலம், வயிற்றுப் புழுக்கள் நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுண்டைக்காயின் மருத்துவ நன்மைகள் பற்றி தெரிந்துக்கொள்வோம் !!