Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....!

கண்திருஷ்டிக்கு பயன்படும் ஆகாச கருட கிழங்கின் மருத்துவ நன்மைகள்....!
ஆகாச கருடன் கிழங்கை கண்திருஷ்டி தோஷம் நீங்கப் பயன்படுத்துவர். இக்கிழங்கினை வீடு மற்றும் கடை வாசல்களில் கட்டித் தொங்கவிடுவர். இது முளைவிட்டு வளரும். அப்படி வளர்ந்தால் நல்லது. இல்லையெனில் கெடுதல் என்று நம்புகின்றனர். நீர் இல்லாமலேயே  இக்கிழங்கு முளைவிட்டு வளரும்.
பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில  நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24  மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது. பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.
 
ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து  இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.
 
தேள் கொட்டினால் ஆகாச கருடன் கிழங்கை வெற்றிலையில் வைத்து மென்று தின்றால் தேள் விஷம் இறங்கும். அதனால் ஏற்பட்ட  நெறிகட்டுதலும் நீங்கும். 
 
கொட்டைப் பாக்களவு கிழங்கை மென்மையாக அரைத்து 50 மி.லி. தண்ணீரில் கலக்கி மூன்று நாள் காலையில் மட்டும் கொடுத்து மேற்ப்பூச்சாகவும் பூசி வர நாய், நரி, குரங்கு, பூனை முதலிய விலங்குகளின் கடி நஞ்சு தீரும்.
 
இக்கிழங்கில் இருந்து தைலம் இறக்குகின்றனர். இத்தைலத்தை மனிதர்களுக்கு வரும் சரும நோய்களுக்கு மேல்பூச்சாகப் போட ஆறும்.  கால்நடைகளுக்கு வரும் சரும நோய்களுக்கும் மேற்பூச்சாக பூச நோய்கள் குணமடையும்.
 
ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக  வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம்  கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ருசியான கருவாட்டுக் குழம்பு செய்ய...!