முடி வளர்ச்சி தூண்டும் பல பொருட்களின் முக்கியமானது ஈஸ்ட், ஈஸ்ட்டில் அதிக ஃபோலிக் அமிலம் இருப்பதால், முடி வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். அதிலிருக்கும் அமினோ அமிலங்கள் முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தும்போது நல்ல மாற்றங்கள் காணலாம்.
1. தேவையானவை பொருட்கள்: ஈஸ்ட் - 3 ஸ்பூன், தேன் - 6 ஸ்பூன். இந்த இரண்டு பொருட்களையும் ஒன்றாக சேர்த்து கலக்கிக் கொள்ளுங்கள். தேவைப்படுமெனில் சிறிது நீர் கலந்து கொள்ளலாம். இதனை தயாரித்த உடன் உடனடியாக பயன்படுத்துதல் முக்கியம். அப்போதுதான் இதன் பலன் அதிகமாக கிடைக்கும்.
உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். அதன் பின் தலைமுடியை அலச வேண்டும். வாரம் இரு முறை செய்தால் முடி நீளமாக வளரும்.
தேனில் முடிக்கு ஊட்டம் அளிக்ககூடிய தாதுக்கள் நிறையவே இருக்கின்றன. இது தலைக்கு பாதுகாப்பான ஒரு லேயரைக் கொடுக்கிறது. இதனால் வெளியிலிருந்து மாசுக்களால் முடி எந்த பாதிப்பும் ஏற்படாதவாறு பாதுகாக்கிறது. இதனால் முடி வரண்டு போவது தவிர்க்கப்படுகிறது. தேனில் இருக்கும் நியூட்ரியன்கள் மற்றும் என்சைம்கள் முடியின் வேர்களுக்கு சக்தியளிக்கிறது. இதனால் முடி உதிர்வும் தவிர்க்கப்படும்.
2. தேவையானவை பொருட்கள்: முட்டையின் மஞ்சள் கரு - 2, ஈஸ்ட் - 1 ஸ்பூன், ஆப்பிள் சைடர் வினிகர் - 1/2 ஸ்பூன், தேன்- 1 டேபிள் ஸ்பூன். முதலில் முட்டையின் மஞ்சள் கருவை நன்றாக க்ரீம் பதத்திற்கு அடித்துக் கொள்ளுங்கள். அதன் பின் ஒன்றன்பின் ஒன்றாக ஈப்பிள்சைடர் வினிகர், தேன், ஈஸ்ட் போன்றவற்றை கலந்து கொள்ள வேண்டும்.
உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 20 - 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள். வாரம் இரு நாட்கள் செய்து பாருங்கள். டல்லான கூந்தலுக்கு நல்ல சிகிச்சை இது.
முட்டையின் வெள்ளைக் கருவைவிட மஞ்சள்கருவில்தான் அதிக ஊட்டச்சத்துத்துக்கள் நிறைந்துள்ளன. வைட்டமின் ஏ, பி, இ, டி மற்றும் கே, அமினோ அமிலங்கள், ஃபோலிக் அமிலம், கால்சியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், கொழுப்பு, கோலின், செலினியம், துத்தநாகம் போன்றவை நிரம்பியுள்ளன.
3. தேவையானவை பொருட்கள்: ஈஸ்ட் - 1 டீஸ்பூன், கற்றாழை - 4 டேபிள் ஸ்பூன், தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன். உங்கள் தலைமுடியை ஈரப்படுத்துங்கள். பின்னர் இந்த கலவையை உங்கள் முடியின் வேர்கால்களில் நன்றாக படுமாறு தடவ வேண்டும். 30 நிமிடங்கள் கழித்து தலைமுடியை அலசுங்கள்.
மேலே சொன்ன 3 பொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து க்ரீம் பதத்திற்கு கொண்டு வாருங்கள். சிறிய மிக்ஸியில் போட்டாலும் க்ரீம் போல் ஆகிவிடும். இதனை உபயோகிப்பதாலும் நல்ல பலன் கிடைக்கும்.