Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சிறுநீரக கற்களின் வகைகளும் இயற்கை மருத்துவ முறைகளும்...!!

சிறுநீரக கற்களின் வகைகளும் இயற்கை மருத்துவ முறைகளும்...!!
சிறுநீரகம், சிறுநீர் குழல்கள், சிறுநீர்ப்பை மற்றும் உடலில் இருந்து சிறுநீரை வெளியேற்றும் குழல்களையும் உள்ளடக்கியது, நம் சிறுநீரக மண்டலம். சிறுநீரகம் உடலில் இருந்து உப்பு, சுண்ணாம்பு மற்றும் பல வேதிப்பொருள்களை வெளியே அனுப்பும்போது சிறுநீரகத்தில் படியும் தேவையற்ற உப்புகள் கற்களாகவோ, சிறு துகள்களாகவோ உருவாகிப் படிய ஆரம்பிக்கும்.
கற்கள் எந்தவகை தாதுக்களால் உருவாகியுள்ளன எனபதைப் பொறுத்து அவற்றைப் பல வகைகளாகப் பிரிக்கலாம். அவற்றுள் கீழ்க்கண்ட  வகைகள் முக்கியமானவை.
 
முதல்நிலைக் கற்கள்: கால்சியம் ஆக்சாலேட் கற்கள், யூரிக் ஆசிட் கற்கள், பாஸ்பேட் கற்கள், மாட்ரிக்ஸ் கற்கள் (புரதக் கற்கள்).
 
இரண்டாம் நிலை கற்கள்: கால்சியம் ஆக்சாலேட் கற்கள் இணைந்து உருவாகும் கற்கள். சிறுநீரகக் கற்களில் 80 சதவிகித கற்கள் இவ்வகைக் கற்களே. பெரும்பாலும் சிறுநீரகங்களிலேயே உருவாகும். அளவில் சிறிதாகவே இருக்கும். கருங்காவி நிறமுடையது. மேற்பரப்பு ஒழுங்கற்று  சொரசொரப்பாக இருக்கும்.
webdunia
இவையும் பெரும்பாலும் சிறுநீரகங்களிலேயே உருவாகின்றன. அளவில் மிகச்சிறியதாக இருக்கும் சில மி.மீட்டர்கள் விட்டமுள்ளவை.
 
மருத்துவ முறை: மாவிலங்கப்பட்டை - 20 கிராம், நெல்லிக்காய் - 20 கிராம், கடுக்காய் - 20 கிராம், தான்றிக்காய் - 20 கிராம், நெருஞ்சில் - 20  கிராம், சீரகம் - 20 கிராம், சோம்பு - 20 கிராம், தனியா விதை - 20 கிராம், சதகுப்பை - 20 கிராம், சிறுபீளை வேர் - 20 கிராம்
 
அனைத்தையும் சுத்தம் செய்துகொள்ளவும். அதை இரண்டு லிட்டர் தண்ணீரிலிட்டு கொதிக்க வைத்து, ஒரு லிட்டர் தண்ணீராகக் சுண்டச் செய்த பிறகு, அந்த தண்ணீரை அதிகாலை, மாலை இருவேளையும் தொடர்ந்து குடித்து வர, சிறுநீரகத்தில் உள்ள கற்கள் கரையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நெஞ்சில் பிடித்துள்ள சளியை வெளியேற்ற உதவும் ஓமம்...!!