Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க...!!

வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க...!!
உணவு மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியும். சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம். 

உடற்பருமன் உள்ளவர்களுக்கு அசிடிட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பைக்கார்பனேட் அடங்கிய சூவிங் கம் சாப்பிடுவதன் மூலம் எச்சில் அதிகம் ஊறி உணவுக்குழாய் வழியே சென்று வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.
 
கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை குறைவாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து உண்ணலாம்.
 
செரிமானம் ஆகாத மாவுச்சத்துக்கள் பாக்டீரியா வளர வழிசெய்யும். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. 
 
மது அருந்துதல் அமிலத்தன்மையை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்க்கும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது.
 
அசிடிட்டி தொல்லை இருப்பவர்கள் உறங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே உணவருந்தி முடிக்கவேண்டும். தூங்கும் முன் சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி சம்பந்தமான எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புத குறிப்புகள் !!