Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள் என்ன...?

Advertiesment
கர்ப்பிணிகள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டிய ஊட்டச்சத்துகள் என்ன...?
கர்ப்பிணிகள் சரிவிகித உணவு உட்கொண்டால் தான் வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதுமான ஊட்டச்சத்து கிடைக்கும். இருப்பினும், உணவை பொருத்தமட்டில் எதை உண்ணலாம் எதை தவிர்க்கவேண்டும் என்ற சந்தேகம் கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படுவது வழக்கம்.

போதுமான ஊட்டச்சத்து எடுத்துக்கொள்ள தவறினால் சிசுவிற்கு பிறவி குறைபாடுகள் ஏற்படக்கூடும். குழந்தைகள் எடை குறைவாக பிறப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடு முக்கிய காரணமாகும். 
 
இரும்புச் சத்து: சிசுவிற்கு பிராணவாயு கொண்டுசேர்க்க இரும்புச்சத்து அவசியம். சிகப்பு இறைச்சி, பட்டாணி, காய்ந்த பட்டாணி ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது.
 
சுண்ணாம்புச் சத்து: உறுதியான எலும்புகள் மற்றும் பற்களுக்கு சுண்ணாம்புச் சத்து அவசியம். சீஸ், யோகர்ட், பால் மற்றும் மத்தி மீனில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு 1,000 மி.கி அளவு சுண்ணாம்புச் சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 
 
கொழுப்பு, புரதம் மற்றும் மாவுச்சத்துகளை நமது உடல் சீராக பயன்படுத்த வைட்டமின் பி6 உதவும். பன்றி இறைச்சி, பறவை இறைச்சி, மீன், முட்டை, காய்கறிகள், வாழைப்பழம், முழுதானிய வகைகள் ஆகியவற்றில் வைட்டமின் பி6 காணப்படும். 
 
சுண்ணாம்புச் சத்தை கிரகிக்க வைட்டமின் டி உதவும். ஆகையால், குழந்தைகளின் எலும்புகள் மற்றும் பற்கள் வளர வைட்டமின் டி தேவை. பால், மீன்கள் மற்றும் சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி பெறலாம்.
 
கீரை வகைகள், கமலாப்பழச் சாறு, பருப்பு வகைகள், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றில் அதிகம் காணப்படும். சிசுவிற்கு பிறவியில் ஏற்படும் நரம்புமண்டலக் குறைபாடுகளை தவிர்க்க பிரசவகாலத்தின் முதல் 12 வாரங்களில் 200 மி.கி ஃபோலேட் எடுத்துக்கொள்ள வேண்டும்.
 
அயோடின்: தாய் மற்றும் சிசுவிற்கு தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க அயோடின் சத்து அவசியமாகும். இதன் மூலம், சிசுவின் மூளை மற்றும் நரம்பு மண்டலம் நன்றாக வளர்வதை உறுதி செய்ய முடியும். 
 
சிசுசின் வளர்ச்சிக்கு புரதச்சத்து இன்றியமையாதது. சிசுவின் திசுக்கள் மற்றும் மூளை வளர்ச்சி அடைய புரதச்சத்து உதவும். மீன், இறைச்சி, பறவை இறைச்சி, பீன்ஸ், சீஸ், டோஃபு, பால், கொட்டை மற்றும் பருப்பு வகைகளில் புரதச்சத்து அதிகம் காணப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஃபுட் பாய்சன் பிரச்சனையை குணப்படுத்த எளிதான வழிகள் !!