Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சருமத்தை எப்போதும் பொலிவாகவும் புத்துணர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள உதவும் டிப்ஸ் !!

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (16:33 IST)
சிலருக்கு சருமம் எப்பொழுதும் பொலிவிழந்து காணப்படும், அவர்கள் இந்த டிப்ஸை பின்பற்றி வந்தால் நல்ல மாற்றத்தை உணர முடியும்.


ஒரே இரவில் முகம் வெள்ளையாக எலுமிச்சை மிகவும் சிறந்த அழகு சாதன பொருளாக விளங்குகிறது. எலுமிச்சை சருமத்தில் உள்ள அழுக்கினை நீக்கி சருமத்தை என்றும் வெள்ளையாக வைத்துக்கொள்ள உதவுகிறது.

எலுமிச்சை பழத்தை பாதியாக நறுக்கி எடுத்து கொள்ளவும், பின்பு சிறிதளவு காபி தூள் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை நறுக்கிய எலுமிச்சை பழத்தில் தூவி சருமத்தில் சர்க்கிள் வடிவில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 10 நிமிடம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இவ்வாறு இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் இரவு தூங்கும் போது செய்து வர, சரும செல்களுக்கு நல்ல புத்துணர்ச்சி அளிக்கும், சருமத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளும் நீங்கும், அதேபோல் எப்பொழுது முகம் வெள்ளையாக மற்றும் ஜொலிஜொலிப்பாக காணப்படும்.

ஒரு பெளலில் ஒரு ஸ்பூன் கோதுமை மாவு மற்றும் ஒரு ஸ்பூன் அரிசி மாவு இரண்டையும் ஒன்றாக கலந்து வைத்து கொள்ளவும்.

பின்பு ஒரு தக்காளியை பாதியாக நறுக்கி, கலந்து வைத்துள்ள மாவுடன், இந்த தக்காளியை தொட்டு முகத்தில் 5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு 15 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

இந்த முறையை தொடர்ந்து 7 நாட்கள் செய்து வர முகம் வெள்ளையாக பொலிவுடன் இருக்கும். மேலும் சருமம் என்றும் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!

காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?

சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மார்பக புற்றுநோய் வருமுன் காக்க என்ன செய்ய வேண்டும்?

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

அடுத்த கட்டுரையில்
Show comments