Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஏராளமான அற்புத மருத்துவகுணங்களை கொண்ட துத்தி இலை !!

Advertiesment
ஏராளமான அற்புத மருத்துவகுணங்களை கொண்ட துத்தி இலை !!
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (12:12 IST)
இரத்த மூலம், கீழ் மூலம், வலி, குத்தல், எரிச்சல், மூலவீக்கம், அனைத்தையும் குணமாக்கும். இதற்கு துத்தி இலைகளை விளக்கெண்ணய்யுடன் மண் பாத்திரத்தில் வதக்கி வாழை இலை அல்லது வெற்றிலையில் வைத்து டயாப்பர் (கோவனம்) போன்று கட்டிக் கொண்டால் மூலச்சூடு நீங்கும்.


ஆசனவாய் கடுப்பு, சூடு நீங்க துத்தி இலை பொடியை நாட்டு பசும்பால், நாட்டு சக்கரையுடன் கலந்துசாப்பிட குணமாகும்.

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல் பிரச்சினையைக் குணப்படுத்தும். இப்பிரச்சினையைப் போக்க துத்தி இலையை காரமில்லாமல் பொரியலாகச் செய்து சாதத்துடன் பிசைந்து, 40 முதல் 120 நாட்கள் வரை சாப்பிட வேண்டும். அல்லது துத்தி இலைகளை நெய்யில் துவட்டி சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

உடல் வலியைக் குணமாகும். அதிகம் வேலை செய்தாலோ அல்லது தூரப் பயணம் செய்தாலோ உடல்வலி ஏற்படும். இந்நேரங்களில் துத்தி இலைகளை கொதிநீரில் போட்டு வேகவைத்து, அந்த நீரில் துணியை தோய்த்துப் பிழிந்து, வலியுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்கலாம்.

உடலில் உள்ள தசைகளுக்குப் பலத்தை அளிக்கக் கூடியது. இதன் இலையில் உள்ள தாவரக் கொழுப்பு மற்றும் பல வேதியியல் பொருட்களில் புரதம், மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் உடலுக்கு நல்ல பலத்தை அளிக்கும்.

உடல் சூட்டாலும், குறைவாக நீர் அருந்துவதாலும் சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை ஏற்படுகிறது இதனைப் போக்க துத்தியிலையை இரசம் செய்து அருந்தி வந்தால் நீர் நன்கு பிரியும். சிறுநீரக நோய் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாவும் இருக்க உதவும் குறிப்புகள் !!