Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைமுடி அடர்த்தியாகவும் கருமையாவும் இருக்க உதவும் குறிப்புகள் !!

Advertiesment
Hair Problem
, செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:19 IST)
நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை அடையாளம். எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும்.


வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும். வெங்காய சாற்றினை தலையில் உற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.

இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பில்லை ஆகும். கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

வெந்தயத்தை அரைத்து தினமும் தலையில் நன்கு ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடி கருமையாக மாறும். தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து தினமும் தலைக்கு தேய்த்து வாருங்கள் முடி கருமையாக மாறும்.

செம்பருத்தி பூ மற்றும் இலையை எடுத்து அரைத்து தலையில் நன்கு ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு மூன்று முறை தொடர்ந்து செய்து வந்தால் தலை முடியை கருமையாக மாற்றலாம்.

செம்பருத்தி தலைக்கு தேவையான போஷாக்கினை கொடுப்பதுடன் முடி உதிர்வில் இருந்தும் தடுக்கின்றது. தலைமுடியை கருமையாக மாற்ற இயற்கை வழிமுறைகளை பின்பற்றுவது தான் சிறந்தது. இது பக்கவிளைவுகளை ஏற்படுத்தாமல் நமது ஆரோக்கியத்தையும் பேண உதவுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் 13,734 பேர் பாதிப்பு; 34 பேர் பலி! – கொரோனா நிலவரம்!