Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு நோய்களை எதிர்த்து போராடும் மருத்துவகுணம் கொண்ட திப்பிலி !!

பல்வேறு நோய்களை எதிர்த்து போராடும் மருத்துவகுணம் கொண்ட திப்பிலி !!
திப்பிலி கொடி வகையைச் சார்ந்த ஒரு நீண்ட காலப் பயிராகும். இது இரண்டு அல்லது மூன்று அடி அகலம் வரை வளரும். திப்பிலியின் காய்கள் வெற்றிலைப் போன்ற காரத்தன்மையுடனும், வாசனையாகவும் இருக்கும்.

காசநோய் கிருமிகளை எதிர்க்கும் தன்மை திப்பிலிக்கு உண்டு. இந்திய மருத்துவத்தில் பல்வேறு நோய்களைத் எதிர்த்து போராடும் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
 
சுக்கு, மிளகு, திப்பிலி இவை மூன்றும் சித்த மருத்துவத்தில் “திரிகடுகம்” என அழைக்கபடுகிறது. பச்சைத் திப்பிலி கபத்தை உருவாக்கும். ஆனால் உலர்ந்த திப்பலியோ கபத்தை அகற்றும்.
 
திப்பிலி, மிளகு, சுக்கு சம அளவாக எடுத்து வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் தேனுடன் கலந்து 3 வேளை சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், நீர்க்கோவை, தொண்டைக் கமறல் போன்றவை குணமாகும்.
 
திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம் அளவு எடுத்து தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வந்தால் இருமல், தொண்டைக் கமறல், வீக்கம், பசியின்மை, தாது இழப்பு போன்றவை குணமாகும், இரைப்பை மற்றும் ஈரல் வலுப்பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணம் நிறைந்த தான்றிக்காயை எதனுடன் சாப்பிடவேண்டும்...?