Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நுணா !!

Advertiesment
நோய்களுக்கு அற்புத மருந்தாகும் நுணா !!
நுணா வேரையையும், காஷாயமிட்டுக் குடிக்கச் சுகப்பேதியாகும். கெடுதலில்லாமல் மலர்ச்சிக்கல் தீரும்.

இன்று, கடைகளில் விற்கப்படும் ‘நோனி’என்ற நுணா சர்பத்- பல்லாயிரக்கணக்கானவர்களால் விரும்பிப் பருகப்படுகிறது. அதாவது, நுணாப்பழத்தில் இருந்து  தயாரிக்கப்படுகிறது.
 
இது, காலரா, டைபாய்டு, காமாலை, தைராய்டு, உடல் பருமன், இதய நோய்கள், புற்றுநோய்கள் போன்றவற்றைக் குணமாக்குவதாக ஆய்வுகள்  சொல்கின்றன.
 
புண்கள், சிரங்குகள் குணமாக நுணா இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும். பேதியாக 10 கிராம் நுணா வேரை நசுக்கி ½ லிட்டர் நீரில் போட்டு  ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
 
நுணா மரப்பட்டையை நசுக்கி, வெந்நீரில் போட்டு கொதிக்க வைக்க, மஞ்சள் நிறமான சாயம் நீரில் கரையும். இந்த சாயத்தால் துணிகளுக்கு நிறமேற்றம் செயல் இருந்து வந்துள்ளது குறிப்படத்தக்கது.
 
பல் சொத்தை குணமாக முதிர்ந்த நுணா காய்களை சேகரித்து உப்பு நீரில் ஊறவைத்து வெயிலில் காயவைத்து சுட்டு கரியாக்கி சலித்து வைத்துக் கொள்ளவேண்டும். இந்த தூளால் பல் துலக்கி வரவேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சூப்பரான சுவையில் சேமியா கேசரி செய்ய !!