கறிவேப்பிலையை உடலுக்கு மேல் மற்றும் உணவில் தொடர்ந்து பயன்படுத்தி வருவோருக்கு தோல் மற்றும் வயிறு சம்பந்தமான புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மெதுவாக குறைகிறது.
சொரியாசிஸ் நோய் உள்ளவர்கள் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் தோல் சம்பந்தமான பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
பலருக்கு தலையில் பொடுகு,பேன்மற்றும் இளமையில் முடி நரைத்து விடுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவர்கள் கறிவேப்பிலையை சாப்பிடுவதாலும், கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலைக்கு தடவி வந்தால் மேற்கண்ட தலைமுடி சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் நீக்குவதற்கு உதவுகிறது.
இரத்த சோகை இருப்பவர்கள் கறிவேப்பிலையை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அதிகரித்து இரத்தசோகையை குணப்படுத்துவதற்கு உதவுகிறது.
சர்க்கரை வியாதிக்கு சிறந்த மருந்தாக கருவேப்பிலை இருக்கிறது. இது கசப்புத்தன்மை அதிகம் கொண்டதால் சாப்பிட்ட உடன் விரைவாக செயல்பட்டு இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை கட்டுக்குள் கொண்டுவரும்.