கடுக்காயில் மலமிளக்கிய பண்புகள் உள்ளன. இரவு தூங்குவதற்கு முன்பு கடுகாய் பொடியை ஒரு டம்ளர் சூடான நீரில் கலந்து குடித்தால் மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பல வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து உங்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
கடுக்காய் பொடியை எடுத்து, அதே அளவு சுக்கு, திப்பிலி இரண்டு தூள்களையும் கலந்து காலை, மாலை சாப்பிட்டால் வாதவலி, பித்த நோய்கள் குணமாகும்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் குறைக்க கடுக்காய் உதவுகிறது.
ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீரை கொதிக்க வைக்கவும். ஒரு டீஸ்பூன் கடுக்காய் பொடியை சூடான நீரில் கலந்து. தாங்கக்கூடிய வெப்பநிலைக்கு வந்ததும், குடிக்க வேண்டும். தொண்டை புண் குணமாகும். மேலும் ஈறுகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
இரத்தக் கசிவு, பிற ஈறு நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் பல் பிரச்சினைகளுக்கு கடுக்காய் மிகவும் நல்லது.
பல் துலக்கிய பின், பற்களையும், ஈறுகளையும் கடுக்காய் தூள் கொண்டு மசாஜ் செய்து, நன்றாக மசாஜ் செய்த பின் ஒரு நிமிடம் கழித்து வாய் கொப்புளிக்கவும்.
கடுக்காய் பொடியை உட்கொள்வதால் அவை சருமத்தை சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறும் என்பதால் இதை எடுத்துக்கொள்வதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.