Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு...!

தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு...!
தைராய்டு என்பது அயோடின் குறைபாட்டால் கழுத்துப் பகுதியில் உள்ள எண்டோகிரைன் சுரப்பிகள் பாதிக்கப்பட்டு அழற்சியை ஏற்படுவதையே 'தைராய்டு' என்கிறோம். இது ஹைப்பர் தைராய்டிசம், ஹைப்போ தைராய்டிசம் என இரண்டு வகையாகப்  பிரிக்கப்படுகிறது.
தைராய்டு ஏற்பட முக்கியக் காரணம் உணவு முறையே. பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சேர்க்கப்படும் பொருள்கள்தான் தைராய்டு சுரப்பியை சிதறடிக்கச் செய்துவிடுகிறது. இதனால் சத்துக் குறைபாடு உண்டாகிறது. இத்தகைய சூழலில் குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய்  தள்ளிப்போவது, கருச்சிதைவு, கருமுட்டையில் கட்டி போன்றவை உண்டாகின்றன. இதனால்தான் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
 
தைராய்டு குறைபாடுகளைப் போக்குவதில் ஆசனங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. தைராய்டு சுரப்பி குறைவாகவோ அல்லது அதிகமாகவோ வேலை செய்வதைக் கட்டுப்பாட்டில் வைக்க மத்ஸ்யாசனம், உத்தானபாதாசனம், சர்வாங்காசனம் போன்ற ஆசனங்கள் உதவும். அத்துடன் பிட்யூட்டரி சுரப்பியின் செயல்பாடுகளை அதிகரிக்கவும் இந்த ஆசனங்கள் உதவும்.
webdunia
விபரீதகரணி, ஹாலாசனம் போன்ற ஆசனம் செய்வதால் கழுத்துப் பகுதியில் ரத்த ஓட்டம் சரியாகும். மேலும் தலைக்குப் பின் பகுதியிலுள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்றாக வேலை செய்யும். அத்துடன் தைராய்டு, பாரா தைராய்டு ஆகிய சுரப்பிகள் நன்றாக சுரக்கத் தொடங்கும்.
 
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் உணவில் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தேங்காய், வெள்ளைப்பூண்டு, வெங்காயம், பசலைக்கீரை, சிவப்பரிசி போன்றவற்றை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் இஞ்சி,  மஞ்சள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது நல்ல பலன் தரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவை மிகுந்த கத்தரிக்காய் மசாலா செய்ய...!