Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

கிராம்பில் உள்ள சத்துக்களும் அதன் அற்புத மருத்துவ பயன்களும் !!

Advertiesment
மருத்துவ குணங்கள்
கிராம்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் மாங்கனீசு அதிகம் உள்ளது. மூளை செயல்பாடு மற்றும் வலுவான எலும்புகளுக்கு நன்மை தரும், வைட்டமின் கே அதிகம் உள்ளது.

கிராம்பு வலி நிவாரணி பண்புகளைக் கொண்டுள்ளது, இது பல்வலியை நீக்கும். கூடுதலாக, கிராம்பு எண்ணெய் பல் மற்றும் தலைவலியைக் குறைக்கவும் உதவுகிறது. கிராம்பு எண்ணெய்யை பற்களில் தடவுவதன் மூலமும் கிராம்பு மற்றும் அதன் எண்ணெயைப் பருகுவதன் மூலமும் நிவாரணம் பெறலாம்
 
வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கிரம்புக்கு அதிக பங்கு உண்டு. இதில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறந்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
 
கிராம்பில் உள்ள யூஜெனோல் கல்லீரலுக்கு நன்மை அளிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் காட்டியுள்ளனர். ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு கலவை கல்லீரலை காயத்திலிருந்து பாதுகாக்கும், சிரோசிஸ் அல்லது நாள்பட்ட கல்லீரல் சேதத்தைத் தடுக்கும்.
 
கிராம்புகளிலிருந்து எடுக்கப்படும் அத்தியாவசிய எண்ணெய்கள் வயிற்றுப் புண்களைக் குணப்படுத்த உதவும் என்றும் ஆராய்ச்சி காட்டுகிறது, ஏனெனில் யூஜெனோல் சளி உற்பத்தியை கணிசமாக குறைக்கும் திறன் கொண்டது.
 
கிராம்பு எண்ணெய்யின் நறுமணம் நாசி பாதையை சுத்தம் செய்ய உதவுகிறது. மேலும் இது ஆஸ்துமா, இருமல், சளி, சைனஸ், மூச்சுக்குழாய் அழற்சி போன்ற பிரச்சினைகளை அமைதிப்படுத்தும். தேன் மற்றும் பூண்டு கலவையை கிராம்பு மற்றும் அதன் எண்ணெய்யுடன் சேர்த்து பயன்படுத்துவதன் மூலம் ஆஸ்துமாவிலிருந்து நிவாரணம் பெறலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பச்சைப்பயறு குருமா செய்வது எப்படி...?