திருநீற்றுப்பச்சிலை என்பது துளசி இனத்தை சேர்ந்தது. இதன் விதைதான் சப்ஜா. திருநீற்றுப்பச்சை செடியில் வெண்மை நிறத்தில் சிறு பூக்கள் பூக்கும். இதன் இலைகள் நறுமணம் கொண்டவை. இந்த இலைகள் மருத்துவ குணம் நிறைந்தது.
சப்ஜா இலை உடலில் உள்ள தேவையற்ற நச்சு நீரை வெளியேற்றும் என்பதால் வியர்வையாக வெளியேற்றிவிடும். சளி, சைனஸ் தொந்திரவால் மூக்கடைப்பு, தலைவலி, தலைபாரம் இருப்பவர்கள் இந்த இலைகளை கைபிடி அளவு எடுத்து 200 மி.லி. நீரில் கொதிக்க வைத்து அருந்தவேண்டும். மூக்கடைப்பு, தலைபாரம் நீங்கும்.
படர்தாமரை தொந்தரவிற்க்கு இந்த இலைகளை அரைத்து சருமத்தில் பூசி வரலாம். அனைத்துவிதமான தோல் நோய்களுக்கும், இந்த இலைச்சாறு ஏற்றது.
இந்த இலைகளின் சாறை உடலில் பூசிக்கொண்டால், பூச்சிகள் எதுவும் நெருங்காது. விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் முதலுதவியாக கடிபட்ட பாகத்தில் இந்த சாறு தேய்க்கப்படுகிறது.
இந்த பச்சிலை சாற்றை முகப்பருக்கள் மீது தேய்த்துவந்தால் பரு நீங்கி இயல்பாகும். முகப்பருவால் வந்த தழும்புகளும் மறையும். ஒரு தேக்கரண்டி விதைகள் நீரில் ஊறிய பின்பு பல மடங்காக அதிகரிக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு தேக்கரண்டி விதையை நீரில் ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். எடையை குறைக்க விரும்புகிறவர்களும் தினம் ஒரு தேக்கரண்டி விதையை ஊறவைத்து சாப்பிடலாம்.
மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதையை சூடான பாலில் கலந்து குடிக்கவேண்டும். கர்ப்ப காலத்தில் ஏற்படும் மலச்சிக்கலுக்கும் இது நல்ல பலனளிக்கும். இது உடல் சூட்டை குறைக்கும் என்பதால் கோடைகாலத்தில் மட்டுமின்றி, உடல் சூட்டால் அவதிப்படும் காலகட்டத்திலும் பயன்படுத்தலாம்.