Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்...!!

தினமும் காலையில் செய்யும் உடற்பயிற்சியினால் ஏற்படும் நன்மைகள்...!!
காலை உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும். இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா உடற்பயிற்சி என எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும்  வைத்திருக்கிறது.
காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடனும், அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது.
 
காலை உடற்பயிற்சி உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். காலையில் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.
 
காலை உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டால், சீரான உணாவு உட்கொள்ளும் முறை என்பது இதன் மூலம் ஏற்படும் நன்மைகளில்  ஒன்று செரிமானம் மற்றும் நல்ல உடல் செயல்பாட்டை ஏற்படுத்துகிறது.
webdunia
உடற்பயிற்சி செய்வதால், உடல் முழுவதும் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதனால் ரத்தத்துக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கிறது. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு அடிபட்டு ரத்தம் வெளியேறினால், விரைவில் உறைந்து, மேலும் வெளியேறவிடாமல் தடுக்கப்படுகிறது.
 
காலை உடற்பயிற்சி, மூளையின் செயல்திறனுக்கு உதவுகிறது. இதனால், மூளையின் நியூரான்கள் தூண்டப்பட்டு நினைவுத்திறன் மேம்படும்.  50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நினைவுத்திறன் குறைபாட்டால் அல்சைமர் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. முறையான காலை உடற்பயிற்சி  மூலம் அல்சைமரின் தாக்கம் குறையும்.
 
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட காலை உடற்பயிற்சி சிறந்தத் தீர்வாக விளங்குகிறது. காலை உடற்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல்,  நடைப்பயிற்சி ஆகியவற்றால் மூளையில் உள்ள மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்களான செரோடோனின், நோர்பினேப்ரைன்,  எண்டார்ஃபின், டோபமைன் ஆகியவை அதிகரிக்கின்றன. இதனால், நாள் முழுவதும் மனம் புத்துணர்ச்சி பெறுகிறது. முன் கோபம், படபடப்பு  ஆகியவை கட்டுப்படுத்தப்படுன்கிறன.
 
காலை பொழுதே அனைவருக்கும் உடற் பயிற்சி செய்ய மிகவும் ஏதுவான நேரம். காலையில் உடற் பயிற்சி செய்வதால் அமைதி மற்றும் கவன சிதைவு போன்ற பிரச்சனைகள் இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹை ஹீல்ஸ் தொடர்ந்து அணிவதால் ஏற்படும் ஆபத்துகள்...!