Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முட்டைகோஸ் வேகவைத்த நீரின் அற்புத மருத்துவ நன்மைகள்...!!

Advertiesment
முட்டைகோஸ் வேகவைத்த நீரின் அற்புத மருத்துவ நன்மைகள்...!!
முட்டைகோஸ் வேகவைத்த நீரை குடிப்பதால் உள்ளுறுப்புகளில் படிந்திருக்கும் டாக்ஸின்களை அழிக்க வல்லது. இதில் குறைவான கலோரியே உள்ளதால் உங்களுக்கு கொழுப்பும் சேராது. இதனால் எளிதாக உடல் எடையை குறைக்கலாம்.
நேரம் மாற்றி சாப்பிடுவது, தொடர்ந்து காலை உணவு தவிர்ப்பது, அதிக காரமுள்ள உணவுகளை சாப்பிடுவது, ஹோட்டல் சாப்பாடு போன்ற காரணங்களால் அல்சர் ஏற்படக்கூடும். இவை அல்சர் மற்றும் கடுமையான வயிற்றுவலியை உண்டாக்கும். இதிலிருந்து மீளவும் உங்களுக்கு  முட்டைகோஸ் தண்ணீர் உதவுகிறது. மேலும் வயிற்றில் ஏற்படக்கூடிய அல்சரை குணப்படுத்தக்கூடியது.
 
நோய் குறித்த பயத்தை விட, அதனால் ஏற்படுகிற பின் விளைவுகள், சிகிச்சை முறைகளை நினைத்து தான் பலருக்கும் பயமே வருகிறது,  இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படக்கூடும்என்று சொல்லப்படுகிறது. இதில் இருக்கக்கூடிய  சல்ஃப்போரபேன் என்ற சத்து உடலில் கேன்சர் செல்கள் வளராமல் தடுத்திடும். அதோடு முட்டைகோஸ் ஜூஸில் அதிகப்படியான ஐசோசியனேட் இருக்கும் இவை உள்ளுருப்புகளில் குறிப்பாக நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை  தடுத்திடும்.
webdunia
வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய கண் தொடர்பான பிரச்சனையிது. கண் புரை என்று அழைக்கப்படும் இந்த பாதிப்பு இப்போது வெகு சாதரணமாகிவிட்டது. கண் பிரச்சனைகள் மற்றும் காட்ராக்ட் வராமல் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் முட்டைகோஸ் வேக  வைத்த தண்ணீரை குடித்து வர வேண்டும்.
 
வயதானவர்களுக்கு ஏற்படக்கூடிய அல்சைமர் பிரச்சனை வராமல் தவிர்க்க வேண்டும் என்றால் நீங்கள் இப்போதிருந்தே கண்டிப்பாக முட்டைகோஸ் ஜூஸ் குடித்து வர வேண்டும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எளிதான முறையில் ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி...? - வீடியோ!