Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயற்கையாக கிடைக்கும் பதநீரில் இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா.....!!

Advertiesment
இயற்கையாக கிடைக்கும் பதநீரில் இத்தனை மருத்துவ நன்மைகள் உண்டா.....!!
இயற்கையாக பனைமரத்திலிருந்து கிடைக்கும் இந்த பதநீரில் நம் உடலுக்கு நன்மை தரக்கூடிய விஷயங்கள் ஏராளம் உண்டு. இந்த பதநீரை பருகினால் உடலுக்கு நல்ல குளிர்ச்சியை ஏற்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோடையில் ஏற்படும் நீர் கடுப்பை நீக்க பதநீர் அருந்தலாம். 
பதநீர் நார் சத்து மிகுந்திருப்பதால் பெண்களின் பேரு காலத்திற்குப்பின் உண்டாகும் மலச்சிக்கலை நீக்குகிறது. இதயத்தை வலுப்படுத்துகிறது. இதில் உள்ள சுண்ணாம்பு சத்து எலும்புகளை வலுபடுத்துகிறது.
 
பதநீரில் இயல்பாகவே அனைத்து சத்துக்களும் நிரம்பி இருப்பதால் பாலுணர்வை கூட்டுகிறது என்கிற மருத்துவக்குறிப்புகளும் காண கிடைக்கிறது சித்த மருத்துவம் என்பது வரட்டுத்தனமான கோட்பாடுகளை கொண்டிருக்கவில்லை இதில் முறையான அறிவியல் ஆய்வுகள்  கொட்டிகிடப்பதால் நம் மக்கள் விழித்தெழுந்து நம் சித்த மருத்துவத்தை மீட்டு பயன்படுத்திட வேண்டும்.
webdunia
வெந்தயத்தை 50 கிராம் எடுத்து லேசாக வறுத்து பொடித்து காலை,மாலை இருவேளை 50 மிலி அளவு சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர  இரத்த கடுப்பு .மூல சூடு தணியும். அதேபோல மஞ்சளை பொடித்து அரை தேக்கரண்டி 50 மிலி காலையில் இறக்கிய பதநீரில் கலக்கி  உட்கொள்ள வயிற்று புண் தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் நீங்கும்.
 
இரத்தக் கடுப்பிலிருந்து விடுபட, 50 கிராம் வெந்தயத்தை எடுத்து லேசாக வறுத்து, பொடி செய்து, காலை, மாலை இருவேளை 50 மிலி அளவு  சூடாக்கிய பதநீரில் கலக்கி அருந்திவர வேண்டும். மேலும், மூல சூடு தணியும்.
 
மஞ்சளை அரைத்து பொடி செய்து, காலையில் இறக்கிய பதநீரில் 50 மில்லி எடுத்து, அதில் அரை தேக்கரண்டி மஞ்சள் தூளை கலக்கி  உட்கொண்டால், வயிற்று புண், தொண்டைப்புண், வெப்ப கழிச்சல், சீத கழிச்சல் ஆகியவை நீங்கும்.
 
பெண்கள் பலரும், மாதவிடாய் தடைபட்டு அதனால் கருப்பை சார்ந்த வலி, வாய்வு, கட்டி முதலியவற்றினால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் பனை குருத்தின் உள்பகுதியை உட்கொண்டால் மாதவிடாய் சிக்கலின்றி வெளியேறி நோயை நீக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தாய்பால் உற்பத்தியை அதிகரிக்கும் உணவுகள் எவை தெரியுமா...?