Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கு !!

பல்வேறு சத்துக்கள் நிறைந்து காணப்படும் சர்க்கரை வள்ளி கிழங்கு !!
சர்க்கரை வள்ளி கிழங்கில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. மேலும் வைட்டமின் எ, பி, சி, பொட்டாசியம், மெக்னீசியம், நார்சத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், இரும்பு, கால்சியம் போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.

சர்க்கரை வள்ளி கிழங்கில் கொழுப்பு மிகவும் குறைவு. மேலும் இதில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. சர்க்கரை வள்ளி கிழங்கில் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது.
 
மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முக்கியமாக நார்சத்து தேவைப்படும். சர்க்கரை வள்ளி கிழங்கில் தேவையான அளவில் நார்சத்து நிறைந்துள்ளதால் உங்கள் குடலின் ஆரோக்கியத்தினை மேம்படுத்தும். மேலும் மலசிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க உதவும்.
 
சர்க்கரை வள்ளி கிழங்கினை தினமும் உண்டு வந்தால் உங்கள் கரு வளர்ச்சிக்கு மிக மிக பயனுள்ளதாக அமையும். ஏனெனில் இதில் அதிக அளவில் போலெட்ஸ் நிறைந்துள்ளது. எனவே கருத்தரிக்க விரும்புவர்களுக்கு சர்க்கரை வள்ளி கிழங்கினை கொடுத்து வாருங்கள் உறவுகளே.
 
சர்க்கரை வள்ளி கிழங்னை அடிக்கடி உண்டு வந்தால் உங்களுக்கு ஏற்படும் பிரீ ராடிகள் செல் அழிவினை தடுக்க உதவும். மேலும் உங்களை எப்போதும் இளமையுடன் வைக்க உதவும்.
 
சர்க்கரை வள்ளி கிழங்கில் அதிக அளவு பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்லெஸ், இரும்புசத்து, போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வரும்பொழுது நோய் எதிர்ப்பு மண்டலம் வலுப்பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அதிக மருத்துவ குணங்களை கொண்ட கீரை எது தெரியுமா...?