Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தினசரி நான்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?

Advertiesment
தினசரி நான்கு பேரிச்சம்பழம் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளா...?
ஒரு டம்ளர் பாலுடன் பேரீச்சம் பழத்தை அரைத்துக் கலந்து சாப்பிட்டு வர எலும்பு வலுப்பெறுவதுடன், உடல் வலிமையும் கூடும். மேலும் ரத்தம் விருத்தியடையும்.


இனிப்பு உணவுகளைத் தவிர்த்துத் தவிக்கும் சர்க்கரை நோயாளிகள் கூட தாராளமாக பேரீச்சம் பழம் சாப்பிடலாம். பேரீச்சம் பழத்தில் உள்ள இனிப்பால் அவர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
 
தினமும் பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால், இரத்த இழப்பை விரைவில் ஈடுகட்டலாம். வெண்குஷ்டம் இருப்பவர்கள் பேரீச்சம்பழ சாறு குடிக்கலாம். இது இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்து, நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.
 
தினசரி இரவில் 3 பேரீச்சம்பழம் சாப்பிட்டு சுடுதண்ணீர் அருந்தினால் மலச்சிக்கலைத் தரும் மந்தமான மலக்குடல் சுறுசுறுப்பாகி மலம் சுலபமாக வெளியேறும்.
 
பேரீச்சம் பழத்தை பிற பழங்களுடன் கலந்து சாலட் ஆக செய்து சாப்பிட வாதம், பித்தம், முட்டி வீக்கம் குணமாகும். பேரீச்சம் கொட்டையை வறுத்து பொடி செய்து, “காபி” போல் பால் சர்க்கரை கலந்து பருகலாம். உடலுக்கு உரமளிக்கும் இதனை வாரம் ஓரிரு நாள் பருகுவது நல்லது.
 
பல் முளைக்கும் குழந்தைகள் வயிற்றுக் கடுப்பால் அவதியுறும் போது பேரீச்சம்பழத்தைச் சுடுநீரில் கலந்து குழைய வேகவைத்து வேளை ஒன்றுக்கு 1 கரண்டி  வீதம் 3 வேளை பருக பேதி நிற்கும்.
 
தினசரி 4 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருபவர்கட்கு வயிற்றுக்கடுப்பு, அஜீரணபேதி, மலச்சிக்கல், அ மிபியாசிஸ் போன்ற வயிற்றுக் கோளாறுகள் வருவதில்லை. குறிப்பாக குடலுக்குப் பாதுகாப்பு கவசமாக பேரீச்சம்பழம் விளங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

85 லட்சத்தை தாண்டிய குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – இந்திய கொரோனா நிலவரம்!