Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிம்மதியான தூக்கம் வர உதவும் சூரிய முத்திரை !!

Advertiesment
Surya mudra
, வியாழன், 30 ஜூன் 2022 (14:28 IST)
தூக்கம் வராமல் அவதிப்படுபவர்களுக்கு யோகா முத்திரைகள் முழுமையாக பலனை தருகிறது. இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கு மிக அவசியம். ஒரு மனிதனுடைய உடலில் ஜீரண மண்டலம் நன்றாக இயங்க வேண்டுமெனில் உடலுக்குறிய ஓய்வு வேண்டும்.


இரவு 10 மணி முதல் காலை 3 மணி வரை உடல் ஓய்வில் தூக்கத்தில் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஜீரண மண்டலம், சுவாச மண்டலம் நன்றாக இயங்கும். நுரையீரல் நன்கு சக்தி பெற்று இயங்கினால்தான் சிறுகுடல் நன்கு இயங்கும். இதற்கு

இரவு தூக்கம் மிக முக்கியமாகும். இன்று நிறைய நபர்கள் இரவு வேலை பார்ப்பதால் இரவு தூக்கமில்லை, இதனால் அஜீரணக் கோளாறு, அல்சர், வயிற்றில் கட்டிகள் வருகின்றது. அது கேன்சர் ஆக கூட மாறிவிடுகின்றது. எனவே இரவு தூக்கம் ஒவ்வொரு மனிதனுக்கும் மிக, மிக அவசியம்.

இன்றைய பரபரப்பான உலகில் மனிதர்கள் மத்தியில் நிதானமாக செயல்படும் நிலை குறைந்து கொண்டே வருகின்றது. காலை முதல் இரவு படுக்கும் வரை ஒரு பதட்டமான மன நிலையில் வேகமாக ஓடுகின்றனர். நிதானம், பொறுமை இழந்து விடுகின்றனர். இதனால் இதயத்துடிப்பு சீராக இருப்பதில்லை. இதன் காரணமாகவும் ஜீரண மண்டலம் பாதிப்படைகின்றது. குடல் இயக்கம் பாதிப்பு அடைகின்றது.

நிதானமாகவும், பதட்டம் இல்லாமலும் நாம் வாழ வேண்டும். அதற்கு யோகா முத்திரைகள் நமக்கு முழுமையாக பயன்படுகின்றன.  இதற்கு மாதங்கி முத்திரையும், சூரிய முத்திரையும் காலை , மதியம், மாலை சாப்பிடும்முன் இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

சூரிய முத்திரை விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். மோதிர விரலையும், கட்டை விரலையும் ஒன்றாக வைக்கவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் செய்யவும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எண்ணற்ற பயன்களை அள்ளித்தரும் தக்காளி !!