Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பயன் தரும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

பயன் தரும் சில இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
கறிவேப்பிலையை அம்மியில் வைத்து அதனுடன் ஒரு தேக்கரண்டியளவு சீரகத்தையும் வைத்து, அரைத்து வாயில் போட்டு தண்ணீர் குடித்துவிட்டால் வயிற்றுப்  போக்கு நிற்கும்.

வெண்டைக்காயை உணவில் அடிக்கடி சேர்த்து வந்தால் நரம்புகள் வலிமை பெறும். மூளையின் இயக்கத்தைச் செம்மைப்படுத்துவதுடன் நல்ல ஞாபக சக்தியையும்  உண்டாக்கும்.
 
அரிசியுடன் வெந்தயத்தைச் சேர்த்து கஞ்சியாக்கி காய்ச்சி உண்டு வந்தால் தாய்ப்பால் சுரக்கும். சாதம் வடித்த கஞ்சியை எடுத்து ஆறவைத்து ஒரு ஸ்பூன் நெய்யில் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலி நீங்கும்.
 
பசுவின் பாலை நூறு மில்லி தண்ணீரில் விட்டு, வெண்தாமரை மலர்களைப் போட்டுக் காய்ச்சி பாத்திரத்தை இறக்கி வைத்து அதில் வரும் ஆவியைக் கண்ணில் படும்படி பிடித்தால், கண் நோய்கள் அகலும்.
 
புடலங்காயின் இலைச்சாறு, காலையில் குழந்தைகளுக்குத் தருவதால் கக்குவான், இருமல் குணமாகும். மலச்சிக்கல் நீங்கும். புடலங்காய் சமைத்து உண்பதால் உடல் பருமன் குறையலாம்.
 
சுக்கு, மிளகு, திப்பிலி, தாமரை இதழ், வெல்லம் சேர்த்து தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி இரவில் ஒரு டம்ளர் சாப்பிடுவதால் மாரடைப்பைத்  தடுக்கலாம். சளிக்கு, பூண்டை தோல் உரித்து நசுக்கி, தக்காளி, உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து சூப் செய்து குடித்தால் சளி சீக்கிரம் குணமாகும்.
 
டான்சில் உள்ளவர்களுக்கு வெள்ளைப் பூண்டு, இஞ்சிச் சாறு இரண்டையும் சேர்த்து அரைத்து இதனுடன் தேன் கலந்து காலை மாலை உணவுக்கு முன் சாப்பிட்டால்  டான்சில் கரையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறு நெருஞ்சில் மூலிகையின் மருத்துவ பயன்கள் என்ன...?