Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பற்களின் ஆரோக்கியத்தை காக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!

பற்களின் ஆரோக்கியத்தை காக்க உதவும் மருத்துவ குறிப்புகள் !!
தினமும் ஆயில் புல்லிங் செய்வது பற்களுக்கு மட்டுமல்ல ஈறுகளுக்கும் பலத்தை கொடுக்கும். நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும்.

கிராம்பு எண்ணெய் பல்வலியை போக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கிறது. காட்டன் பஞ்சை 3 சொட்டு கிராம்பு எண்ணெயில் நனைத்து பல்வலி இருக்கும் இடத்தில் தேய்த்து கொடுத்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.
 
வெங்காயத்தை போன்றே வெள்ளரிக்காய்யை மெல்லிசாக நறுக்கி, அதை பற்களுக்கு அடியில் சிறிது நேரம் வைத்து இருந்தால்,  தாங்க முடியாத பல்வலி  குறைந்துவிடும்.
 
நமக்கு பல்வலி அதிகமாக இருந்தால், இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி, அதை பல்வலி இருக்கும் இடத்தில் வைத்து மென்று வரவேண்டும் இதனால் பல்வலிக்கு  உடனடி நிவாரணி கிடைக்கும்.
 
பல்வலி காரணமாக நமது ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டிருந்தால், அதற்கு சூடான டீ பேக்கை எடுத்து பல்வலி இருக்கும் இடத்தில் நேரடியாக வைத்து, ஒத்தடம் போன்று கொடுத்து வந்தால், பல்வலி மற்றும் ஈறுகளின் வீக்கத்தை குறைக்கலாம்.
 
தினமும் நாம் சாப்பிடும் உணவுகள் நமது பற்களின் இடுக்குகளில் சிக்கிக் கொள்வதால், அது கிருமிகளாகி, பற்களில் வலியை ஏற்படுத்துகிறது. எனவே அன்றாடம் நாம் பற்களின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். 
 
நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் எடுத்து வாயில் போட்டு கொப்பளிக்கவும் பின்னர் வெதுவெதுப்பான நீரில் வாயை கழுவவும். இதனை செய்து வந்தால் பல் தொடர்பான பிரச்சினைகள் இருக்காது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா ஊமத்தை...?