Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வீட்டில் எல்லா இடங்களிலும் சுற்றி திரியும் பல்லிகளை விரட்ட சில டிப்ஸ்கள் !!

Advertiesment
பல்லி
வீட்டில் எலிகளுக்கு அடுத்தப்படியாக அதிக பிரச்சனைகளை தருவது இந்த பல்லிகள் தான். அதுவும் குழந்தைகள் இருக்கும் வீட்டில், பல்லிகள் இருந்தால் அது தொல்லையாகவே இருக்கும்.

பிரிஞ்சு இலை: பிரிஞ்சி அல்லது பிரியாணியி;ல் வாசனைக்காக பயன்படுத்தும் பொருள் தான் இந்த பிரிஞ்சு இலை. இந்த இலையை நெருப்பில் எரித்தால் கிளம்பும்  புகையை, பல்லி இருக்கும் இடங்களில் பரவ விடுங்கள். பிறகு பல்லிகள் நடமாட்டம் அப்பகுதியில் இருக்காது.
 
கோழி முட்டை ஓடு: உடையாத கோழி முட்டை ஓடு இருந்தால், அதனை பல்லி சுற்றும் இடங்களில் ஆணி அடித்து அதன் மேல் முட்டை ஓட்டை வையுங்கள். நம் வீட்டில் கோழி வளர்ப்பதாக நினைத்து பல்லிகள் உள்ளே வராது. அது பல்லிக்கு அச்சமூட்டும் ஒரு பொருள்.
 
வெங்காயம்: வெங்காயத்தை சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள். அந்த துண்டை, பல்லி உலாவும் இடங்களில் வைத்துவிடுங்கள். அப்போது, பல்லியின்  தொந்தரவு குறையும். மேலும், வெங்காய சாற்றை அப்பகுதியி;ல் தெளித்தாலும் பல்லி வராது.
 
பூண்டு: பூண்டு பற்கள் பல்லிக்கு ஆகாவே ஆகாத பொருட்களில் ஒன்று. எனவே அவற்றை பல்லி எப்போதும் திரியும் இடங்களில் வைத்து விட்டால், அந்த இடத்தில் இருந்து பல்லி காணாமல் போய்விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மகத்துவங்கள் நிறைந்த வேப்ப எண்ணெய் !!