Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்கள்...?

Advertiesment
உடலில் எந்த பாகத்தில் பல்லி விழுந்தால் என்ன பலன்கள்...?
அந்த காலத்தில் பல்லி விழும் பலன்கள் மற்றும் பல்லி கத்தும் பலன்களை அறிய கௌளி சாஸ்திரம் கற்பார்கள். பழம்பெரும் இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் கூட மனிதர்களுக்கு வரும் எதிர்வினைகளை முன் கூட்டியே அறிய வைக்கும் ஒரு உயிரினங்களில் சிறப்பானதாக பல்லி கருதப்படுகிறது. 

பல்லி எதிர்பாராமல் தலையில் விழுந்தால் அவருக்கு அடுத்தவர்களிடமிருந்து துன்பம் நேரலாம் அல்லது மனநிம்மதி கெடலாம் அல்லது சொந்த குடும்பத்திலோ  நெருக்கமான உறவினர்களின் வீட்டில் மரணம் நிகழலாம்.
 
குறிப்பாக பல்லி நமது தலையில் எந்த பக்கம் விழுந்தாலும் பிரச்சனை தான் உண்டாகும். தலையின் இடது பக்கம் விழுந்தால் துன்பம் நேரும். வலது பக்கம் விழுந்தால் கலகம் உண்டாகும்.
 
பல்லி விழும் பலன்கள் தலை முடி: தலையில் இல்லாமல் தலை முடியின்மீது பல்லி விழுந்தால் ஏதேனும் ஒரு வகையில் நமக்கு நன்மை நிகழும் என்பதன்  அர்த்தமாகும்.
 
முகத்தில் பல்லி விழுந்தால்: முகப்பகுதியில் பல்லி விழுந்தால் உறவினர்கள் வீட்டிற்கு வருவார்கள் என்று அர்த்தமாகும்.
 
புருவத்தில் பல்லி விழுந்தால்: அதேபோல் புருவத்தில் பல்லி விழுந்தால் ராஜபதவியில் இருப்பவர்களிடமிருந்து உதவி கிடைக்கும். அதுவே உங்கள் கண்ணம் அல்லது கண்களில் பல்லி விழுந்தால் ஏதோ ஒன்றிற்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள் என்று அர்த்தமாகும்.
 
இடது கை அல்லது இடது கால்: இடது கை மற்றும் இடது காலில் பல்லி விழுந்தால் அன்றைய நாள் முழுவதும் மகிழ்ச்சி கிடைக்கும் என்று அர்த்தமாகும். அதுவே  வலது கை அல்லது வலது காலாக இருந்தால் உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறுகள் ஏற்படும் என்ற அர்த்தமாகும்.
 
பாதத்தில் பல்லி விழுந்தால்: வரும் காலங்களில் வெளிநாடு பயணங்கள் மேற்கொள்வீர்கள் என்று அர்த்தமாகும்.
 
தொப்புள் பகுதியில் பல்லி விழுந்தால் விலைமதிப்பு மிக்க பொருட்களான வைர வைடூரியங்கள், இரத்தின கற்கள் கிடைக்க பெருமாம்.
 
தொடையில் பல்லி விழுந்தால் தங்களுடைய பெற்றோர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்துவீர்களாம்.
 
மார்பு பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன்.? இடது பக்க மார்பில் பல்லி விழுந்தால் சுகம் கிடைக்கும். அதுவே வலது பக்க மார்பில் பல்லி விழுந்தால்  இலாபம் கிடைக்கும்.
 
கழுத்து பகுதியில் பல்லி விழுந்தால் என்ன பலன் கிடைக்கும். கழுத்தின் இடது பக்கத்தில் பல்லி விழுந்தால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றி உண்டாகும்.  அதுவே வலது பக்க கழுத்தில் பல்லி விழுந்தால் மற்றொருவருடன் பகை உண்டாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராகு கேது தோஷம் நீங்க செய்யவேண்டிய பரிகாரங்கள் என்ன...?