Publish Date: Tue, 05 Jul 2022 (17:53 IST)
Updated Date: Tue, 05 Jul 2022 (17:59 IST)
புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுக்கிறது.
தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் ஜுரம் நீங்கும். தினமும் புடலங்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை விரைவில் நீங்கும்.
நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.
வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை புடலங்காயை பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
தலைமுடி கொட்டுதல், இள நரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.
புடலங்காய் சாறினை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.
கல்லீரல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுக்களை முறித்து, உடலுக்கு நன்மை செய்கிறது. நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.