Publish Date: Tue, 05 Jul 2022 (16:13 IST)
Updated Date: Tue, 05 Jul 2022 (16:21 IST)
முட்டைகோஸ் பச்சையாக அப்படியே சாப்பிடும் பொழுது அதில் இருக்க கூடிய சத்துக்கள் அனைத்தும் நமது உடலிற்கு கிடைக்கிறது. மிக முக்கியமாக, அதிக நேரம் வேகவைக்கக் கூடாது. அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிட்டால், அதில் உள்ளஅனைத்தும் வெளியேறி விடும்.
முட்டைக்கோஸை நறுக்கும் முன்பு நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு அறுக்க வேண்டும். ஏனென்றால் நறுக்கி விட்டு கழுவினால் அதன் சத்துகளை தண்ணீரில் இழக்க நேரிடும்.
முட்டைக்கோஸை பருப்பு சேர்த்து, பொரியல், கூட்டு அல்லது ஜூஸ் போட்டு சாப்பிடலாம். அதுமட்டுமல்ல முட்டைக்கோஸில் லாப்டிக் அமிலம் உள்ளது. இது குடலில் உள்ள நோய் தொற்றுகளை அழித்து குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைக்கோஸை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்த குறைபாடுகள் வெகு விரைவில் நீங்கும். மேலும் ரத்தம் உறைந்து போவதை தடுத்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழி செய்கிறது.
அல்சரால் அவதிப்படுபவர்கள் முட்டைக்கோசை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சர் விரைவில் குணமாகும். ஏனென்றால், இதில் அல்சரரை குணப்படுத்தும் பூளுட்டோமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.
கர்ப்பிணி பெண்களுக்கு போலிக் அமிலம் அவசியமான ஒன்றாகும். முட்டைகோசில் அதிக அளவில் நிறைந்துள்ளது. கருவில் இருக்கும் குழந்தை வளர்ச்சிக்கும், தாய்ப்பால் அதிகமாக சுரக்கவும் முட்டைக்கோஸை தொடர்ந்து சேர்த்துக் கொள்வது அவசியம். இதில் உள்ள விட்டமின் ஏ சத்து கண் பார்வை கோளாறுகளை போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்க செய்யும்.
Sasikala
Publish Date: Tue, 05 Jul 2022 (16:13 IST)
Updated Date: Tue, 05 Jul 2022 (16:21 IST)