Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

சரும பராமரிப்பு; ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!
முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக விரட்ட, இந்தமுறை மிகவும் சிறந்தது. ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும்போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும். இதனால் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். 
ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால்தான், முகம் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த  அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.
 
பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்கவேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை குறைத்துவிடலாம்.
 
ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம்  நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
webdunia
எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படுத்தாமல், சருமத்தை அழகாக்கவும், உடலை ஆரோக்கியமாக்கவும் வைக்க சூடான நீரை வைத்து ஆவி பிடிப்பது மிகவும் சிறந்தது. ஏனெனில் இதனால் சருமத்தில் உள்ள சரும துளைகள் விரிவடைந்து, அதில் உள்ள அழுக்குகள், கிருமிகள் விரைவில் வெளியேறிவிடும். மேலும்  இதற்கு எந்த ஒரு செலவும் ஆகாது. இதனை எந்த நேரத்திலும், வீட்டில் சூடான நீரை வைத்து செய்யலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீரகம் தொடர்பான வியாதியை குணமாக்கும் நெருஞ்சி