Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!

செம்பு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வைத்துக் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்...!
செம்பு பாத்திரத்தில் குடிநீர் வைத்துக் குடிப்பது உடலுக்கு நல்லது என இப்போது புதிதாகக் கண்டறியப்பட்டது போல் கூறப்படுகிறது. ஆனால், ஆயுர்வேத  மருத்துவத்தில் ஏற்கனவே இதுகுறித்து விளக்கப்பட்டுள்ளது.
செம்பு கலந்த நீரானது, எலும்பை உறுதி செய்யும் தன்மைக் கொண்டவை. மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும்  இரத்தசோகை பிரச்னையின்  வரவை கட்டுப்படுத்தும். குறிப்பாக கர்ப்பிணிப்பெண்கள் செம்பு பாத்திரத்தில் ஊறிய தண்ணீரைக் குடிப்பதால், தாய்க்கும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் உடல்  ஆரோக்கியம், உடல் வலிமை கிடைக்கும்.
 
நாம் பெரும்பாலும் பயன்படுத்தக்கூடிய எவர்சிலவர் பாத்திரங்களை விடவும் செம்பு பாத்திரங்கள்தான் சிறந்தவை. செம்புப் பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பியும்,  உணவு சமைத்தும் பயன்படுத்தி வந்தால், விந்தணு உற்பத்தி அதிகமாகும்.
 
குடிநீரை நன்றாக காய்ச்சி ஆறவைத்து செம்புப் பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம். இந்த தண்ணீரிலேயே சீரகம், துளசி,  புதினா, ரோஜா இதழ் போன்ற  மூலிகைகளை தினம் ஒன்றாக கலந்தும் குடிக்கலாம். உடலுக்கு கூடுதல் நன்மைக் கிடைக்கும்.
webdunia
தண்ணீரை செம்பு பாத்திரத்தில் இரவே அல்லது குறைந்தது நான்கு மணி நேரமாவது சேமித்து வைப்பதால், செம்பில் இருந்து  ஒரு இயல்பை நீர் பெறுகிறது. தமிரத்தில் சிறப்பான ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள் அடங்கியுள்ளது. அதனால்தான் புற்றுநோய் அணுக்கள் வளர விடாமல் அது பாதுகாக்கிறது. 
 
தமிரத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணங்கள், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் மற்றும் திட்டுகளை சிறப்பாக கையாளும், கூடுதல் அலவிலான தாமிரத்தால், உங்கள் சருமம் மற்றும் முடிக்கு இயற்கையான ஈரத்த ஓட்டம் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கட்டிகளை கரைக்கும் தன்மையுடைய சப்பாத்திக் கள்ளி