Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எளிமையான முறையில் பாத வெடிப்பை சரிசெய்ய அற்புத டிப்ஸ்...!!

Webdunia
பாத வெடிப்பு நீங்க, இரவு தூங்கும் முன்பு கால்பாதங்களில் ஆலிவ் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தடவி, காலை எழுந்ததும் கால்களை நன்கு கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால் பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
அரிசி மாவுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். அதனுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து கலக்க வேண்டும். கால்களை  பத்து நிமிடங்கள் வெது வெதுப்பான நீரில் வைத்து எடுத்த பின் அரிசி மாவு விழுதை பாதங்களில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். இதனை  தொடர்ந்து தினமும் செய்யவேண்டும். அரிசி மாவிற்கு பழைய செல்களைப் புதுப்பிக்கும் தன்மை உண்டு. 
 
எலுமிச்சை சாறுக்கு கடினமான தோலை மென்மையாக்கும் தன்மை உள்ளது. தினமும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் கால்களை 10  நிமிடங்கள் ஊற வைத்து எடுத்து பின் நன்கு கால்களை தேய்த்து கழுவினால் பாத வெடிப்புகள் நாளடைவில் மறையும்.
 
தேனையும் பாலையும் 1:2 என்ற விகிதத்தில் எடுத்து, பால் சிறிது வெது வெதுப்பாக இருந்தாலே போதுமானது. முதலில் கால்களை வெது  வெதுப்பான நீரில் ஊற வைத்து பின் தேன் மற்றும் பால் கலந்த கலவையில் கால்களை ஊற வைத்து, பின்பு கால்களை நன்கு மசாஜ் செய்து  நன்கு நீரினால் கழுவ வேண்டும்.
 
வாழைப்பழத்தை நன்கு குழைத்து, அதனை கால் பாதங்களில் நன்கு தேய்த்து ஒரு பற்று போடவேண்டும். ஒரு பத்து நிமிடங்கள் கழித்து  கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி, ஒரு சுத்தமான துணியைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். தினந்தோறும் இந்த முறையை  பின்பற்றினால் பாத வெடிப்பில் இருந்து விடுபடலாம்.
 
எலுமிச்சை பழத்தை பாதியாக வெட்டிக் கொள்ள வேண்டும். அந்த பாதி பழத்தை வெள்ளை சர்க்கரையில் தொட்டு கால் பாத வெடிப்பு உள்ள  இடத்தில தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். தினமும் பத்து நிமிடங்கள் இதைச் செய்தால் பாத வெடிப்பு காணாமல் போய்விடும்.
 
கால்களை வெது வெதுப்பான நீரில் கழுவி சுத்தம் செய்து கொண்டு கற்றாளை ஜெல்லை கால்களில் தடவி பின் கால் உரையை மாட்டிக் கொண்டு இரவில் தூங்க வேண்டும். மறுநாள் காலையில் எழுந்து கால்களை நன்கு கழுவி சுத்தம் செய்து துடைத்து ஈரத்தை போக்க  வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

வயதானவர்களை தாக்கும் சர்கோபீனியா நோய்.. என்ன செய்ய வேண்டும்?

கோடையில் பீர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

வேகமாக பரவும் மெட்ராஸ் ஐ.. தடுப்பது எப்படி?

கோடை காலத்தில் குளிர்ச்சியை தரும் கம்பங்கூழ்.. முன்னோர்கள் தந்த உணவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments