Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முகத்தின் கருமைநிறத்தை நீக்கி பளபளக்க செய்யும் இயற்கை அழகு குறிப்புகள்.....!

முகத்தின் கருமைநிறத்தை நீக்கி பளபளக்க செய்யும் இயற்கை அழகு குறிப்புகள்.....!
பச்சை உருளைக்கிழங்கின் சாற்றை முகத்தில் தடவி வர சூரியக் கதிர்களால் ஏற்படும் கருமை நிறம் மாறும். கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை  சாறு, ஒரு டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
குளிர்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும் போது. கோடை என்றால் சட்டென நினைவுக்கு வருவது வெயிலின் சூடும், அதனால் உண்டாகும்  வியர்வையும்.
 
வியர்வை அதிகம் சுரக்கும் ஒருசிலரது உடலில் நாற்றமும் ஏற்படும். வியர்வையினால் உண்டாகும் இந்த நாற்றம் நமது அருகில் இருப்பவரை முகம் சுழிக்க  வைக்கும். அத்தகைய நிலை உண்டாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
 
குளிக்கும் நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்திலிருந்து பிழியப்பட்ட சாறை ஊற்ற வேண்டும். அதில், கால் தேக்கரண்டி அளவு உப்பையும் சேர்க்க வேண்டும். இந்த நீரில் குளித்து வந்தால், வியர்வை நாற்றம் அறவே நீங்கிவிடும்.
webdunia
தேக்கரண்டி சீயக்காய் தூள், 2 தேக்கரண்டி வெந்தயத் தூள் ஆகியவற்றை வெந்நீரில் கலந்து களி போல் தயாரிக்கவும். இதை ஒரு நாள் விட்டு ஒரு நாள்  தலைக்கு தேய்த்து குளித்து வரவும். இரண்டே வாரத்தில் உடலில் நிரந்தமாக குடிகொண்டிருக்கும் வியர்வை நாற்றம் ஓடிவிடும். தலையும், உடலும் சுத்தமாகி  மணம் வீசும்.
 
கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க கை முட்டிகளில் உள்ள கறுப்பு நிறத்தைப் போக்க எலுமிச்சை சாறை தேய்த்து சோப்புப் போட்டுக் குளித்தால் நாளுக்கு நாள் கறுப்பு நிறம் மாறி விடும்.
 
பருமனாக இருப்பவர்கள் எடையை குறைக்க தினமும் காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை பழச்சாற்றை பிழிந்து  அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் எடை குறையும்.
 
முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம்  அழகு பெறும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோயில்லா நீடித்த ஆயுளை பெற உதவும் கடுக்காய்...!