Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மிகுதியான நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ள சிவப்பு அரிசி...!!

Advertiesment
மிகுதியான நார்ச்சத்துக்கள் அடங்கியுள்ள சிவப்பு அரிசி...!!
எந்த அரிசியிலும் இல்லாத அளவுக்கு பி-1, பி-3, பி-6 ஆகிய வைட்டமின்கள் - எந்த அரிசியிலும் காணமுடியாத அளவுக்கு இரும்புச் சத்து, சிங்க், மாங்கனீசு, மெக்னீசியம், செலினியம், பொசுபரசு போன்ற கனிமங்கள், மிகுதியான நார்ச்சத்து என சிவப்பரிசியில் அடங்கியிருக்கின்றன.

சிவப்பு அரிசியில் மானோகோலின் - கே என்கிற அற்புத வேதிப்பொருள் உள்ளது. இதைத்தான் மருத்துவத்துறையில் இப்போதும் ‘லோவாஸ்டேடின்’ என்ற பெயரில் ரத்தத்தில் கொழுப்பைக் குறைப்பதற்காக உள்ளது.
 
இந்த சிவப்பு அரிசி ஓர் முழு தான்யமாக இருப்பதை தவிர, நமது ஆரோக்கியத்திற்கும் நல்லது. இதில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது.
 
நார்சத்து நிறைந்து இருப்பதுடன், சுலபமாக செரிக்கக்கூடிய மாவுச்சத்தும் இருப்பதால் இரத்தத்தில் இருக்கும் கொழுப்புச் சத்தை குறைக்கிறது. இந்த நார்சத்து புற்றுநோய் உண்டாக்கக்கூடிய வேதியியல் பொருட்கள் பெருங்குடலை அணுகாத வண்ணம் பார்த்துக் கொள்ளுவதால், கோலோன் புற்றுநோய் தடுக்கப் படுகிறது.
 
இதில் இருக்கும் கனிம (தாது) சத்துக்கள் கூந்தல், பற்கள், நகங்கள், தசைகள், எலும்புகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகிறது. மேலும் மலக்கட்டு  ஏற்படாமல், மலம் சுலபமாக வெளியேறவும் உதவுகிறது.
 
ஒரு கிண்ணம் சிவப்பு அரிசியில் நமக்கு தினமும் வேண்டிய 8% மாங்கனீசும், 14% நார்சத்தும் கிடைக்கிறது. புளிக்க வைக்கப்பட்ட சிவப்பு அரிசியில் சிறுநீர்ப்பை, கல்லீரல், உணவுக்குழாய் மற்றும் இரத்தப் புற்று நோய்கள் வராமல் காக்கக்கூடிய தன்மைகள் இருக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தினமும் மஞ்சளை பயன்படுத்தினால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?