Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா அருகம்புல் சாறு...!!

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா அருகம்புல் சாறு...!!
அருகம்புல் வாதம், பித்தம், கபம் போன்ற நோய்களை குணப்படுத்தி உடலுக்கு ஊட்டத்தை வழங்கும். சிறுநீரை பெருக்கவும், இரத்த போக்கை தடுக்கவும், மருந்துகளின் நச்சி தன்மைகளை குறைக்கவும் அருகம்புல் சிறந்த மருந்தாக விளங்குகிறது.
தேள், பாம்பு, பூரான் போன்ற விஷச்சந்துகள் கடித்தால் உடனே அருகம் புல்லை அரைத்து ஒரு டம்ளர் கொடுக்க வேண்டும். இவ்வாறு கொடுப்பதினால் விஷம்  பரவுவது தாமதப்படுத்தும் இந்த அருகம்புல்.
 
அருகம் புல்லை ஒரு கையளவு எடுத்து, அதனுடன் சிறிதளவு மஞ்சள் சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, புண், படர்தாமரை, அரிப்பு உள்ள இடத்தில் தேய்த்து ஒரு  மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். பின்பு குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இவ்வாறு தினமும் செய்து வர பிரச்சனை சரியாகும்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி, அதிகப்படியான இரத்த போக்கு போன்ற பிரச்சனைகள் குணமாக, இந்த அருகம் புல்லை அரைத்து  காய்ச்சாத பசும் பாலில் கலந்து ஒரு டம்ளர் அருந்தலாம்.
 
கண் நோய்களுக்கு அருகம்புல் சாறு சிறந்த நிவாரணம் அளிக்கின்றது. எனவே அருகம்புல்லை சிறிதளவு எடுத்து தட்டி, துணியில் வைத்து கண்களில் இரண்டு  சொட்டுகள் பிழிய கண் எரிச்சல், கண் வலி, கண் சிவப்பு போன்ற பிரச்சனைகள் குணமாகும்.
 
உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கையளவு அருகம் புல்லை எடுத்து நன்றாக அரைத்து, அதனுடன் காய்ச்சாத பசும் பால்  கலந்து குடித்து வர உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் அனைத்தும் கரையும். இதனால் உடல் எடை குறைய ஆரம்பிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் 40 ஆயிரத்தை தொட்ட தினசரி பாதிப்புகள்! – இந்தியாவில் கொரோனா பாதிப்பு!