முடியின் வளர்ச்சியை மேம்படுத்த எத்தனையோ வழிகளை முயற்சிக்கிறோம். இருப்பினும் எந்த ஒரு பலனும் கிடைப்பதில்லை. இப்படி பல முயற்சிகளை மேற்கொண்டும் உங்களுக்கு முடி வளராவிட்டால், அதற்கும் சில காரணங்கள் உள்ளன.
அவை என்னவென்று தெரிந்து கொண்டு, அதை சரிசெய்தால், நிச்சயம் உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதிலும் இயற்கையான முறையின் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.
தற்போது நிறைய பேர் தலைக்கு தினமும் எண்ணெய் வைப்பதில்லை. இப்படி எண்ணெய் வைக்காமல் இருப்பதால், தலைமுடி மிகுந்த வறட்சிக்குள்ளாகி, முடி வெடிப்பை ஏற்படுத்தி, முடியின் வளர்ச்சியில் இடையூறை ஏற்படுத்துகிறது
தலைமுடியைப் பராமரிக்கிறேன் என்று பலர் ஷாம்புக்கள், கெமிக்கல் நிறைந்த சீரத்தைப் பயன்படுத்துவார்கள். இப்படி கண்ட கெமிக்கல் நிறைந்த பொருட்களை தலைமுடிக்கு பயன்படுத்தினால், அவை முடியின் ஆரோக்கியத்தையும் வளர்ச்சியையும் முழுமையாக தடுத்துவிடும்.
தலைமுடி அதிகம் உதிர்வதற்கு வைட்டமின் குறைபாடும் ஓர் முக்கிய காரணம். தலைமுடி ஆரோக்கியமாக வளர வேண்டுமானால், அதன் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய வைட்டமின்களை அன்றாடம் எடுக்க வேண்டியது அவசியம்.
ஒரு பௌலில் விளக்கெண்ணெய் 2 டேபிள் ஸ்பூன் தேன் 1 டேபிள் ஸ்பூன் மற்றும் சிறிதளவு முட்டை மஞ்சள் கரு ஆகிய மூன்று பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அந்த கலவையை 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வர பொடுகு நீங்கும். மேலும் இதனை வாரத்திற்கு 2 முறை என 2 மாதம் தொடர்ந்து செய்து வந்தால், தலைமுடியின் அடர்த்தியில் அதிகமாவதை காணலாம்.
விளக்கெண்ணெயை தலைமுடிக்கு அடிக்கடிப் பயன்படுத்தி வந்தால், தலையில் இரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், தலைமுடி வறட்சியின்றி மென்மையாக பட்டுப் போன்று இருக்கும்.