Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் பிரண்டை உப்பு !!

Advertiesment
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற உதவும் பிரண்டை உப்பு !!
, வியாழன், 6 ஜனவரி 2022 (16:40 IST)
பிரண்டையில் சாதாரண பிரண்டை, சிவப்பு பிரண்டை, உருட்டுப்பிரண்டை அல்லது உருண்டைப்பிரண்டை, முப்பிரண்டை, தட்டைப்பிரண்டை அல்லது சதுரப்பிரண்டை, களிப்பிரண்டை, தீம்பிரண்டை, புளிப்பிரண்டை, ஓலைப்பிரண்டை என பல வகைப்படும்.

பிரண்டையில் உள்ள மிகையான சுண்ணாம்பு சத்து (கால்சியம்) தான்  எலும்பு மச்சையில் திரவம் அதிகமாக சுரக்க கால்சியம் தேவை. அதுமட்டுமின்றி வாயில் ஆரம்பித்து ஆசனவாய் வரை உருவாகும் 300 விதமான நோய்க்கும் சிறந்த மருந்து பிரண்டை என போகரின் நிகண்டுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
குறிப்பாக சிறுகுடலில் ஏற்படும் குறைபாடுகள் பிரண்டையால் உடனடியாக நிவர்த்தியாகும். பிரண்டை உப்பை சுமார் 300 mg தேனில் அல்லது நெய்யில் தினமும் சாப்பிட்டு வர உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றபட்டு உடல் குறைப்பு ஏற்படுகிறது. சிறுகுடல் மற்றும் வயிற்றில் உள்ள வாயு  முழுவதும் வெளியேறுவதை உடனடியாக உணரலாம்.
 
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் (அ) உப்பை பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது அரு மருந்து.
 
இயற்கையான முறையில் முறைப்படி தயாரிக்கப்பட்ட பிரண்டை உப்பை தினமும் இருவேளை 300 mg அளவு தேனில் அல்லது நெய்யில் சாப்பிட்டு வந்தால் இரு மாதங்களில் நினைத்த அளவு உடல் எடையை குறைக்க முடியும்.
 
அஜீரணக் கோளாறுகளைப் போக்கும். மூலநோயால் அவதிப்படுபவர்களுக்கு இந்தத் துவையல் பலன் தரும்.  மூலத்தால் மலத்துவாரத்தில் அரிப்பு, மலத்துடன் ரத்தம் கசிதல் போன்ற சூழலில் இந்தத் துவையலைச் சாப்பிடலாம். மேலும் பிரண்டையை நெய்விட்டு வதக்கி, அரைத்து, ஒரு டீஸ்பூன் வீதம் காலையிலும் மாலையிலும் சாப்பிட்டுவந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அபார சுவையில் மினி ஜாங்கிரி செய்ய !!