Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இயற்கையான முறையில் சளியை கரைக்கும் அற்புத மூலிகை தூதுவளை !!

இயற்கையான முறையில் சளியை கரைக்கும் அற்புத மூலிகை தூதுவளை !!
, வியாழன், 6 ஜனவரி 2022 (14:10 IST)
தூதுவளையின் இலை கரும்பச்சை நிறத்தில் இருக்கும். இதன் பூ ஊதா நிறத்தில் இருக்கும். இதன் கொடியிலும், இலைகளிலும் முட்கள் காணப்படும். சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். 

தூதுவளையின் இலை, பூ, காய், பழம், வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டது. குறிப்பாக ஆஸ்துமா நோய்க்கு இது மருந்தாகப் பயன்படுகிறது.
 
தூதுவளையானது சிங்க வல்லி, ரத்து நயத்தான், அளர்க்கம், தூதூவேளை, தூதூளம், தூதுளை போன்ற பல பெயர்களில் அழைக்கபடுகிறது.
 
தூதுவளைக் கீரையை தினமும் சாப்பிட்டு வர சளி, காது மந்தம், காது எழுச்சி, காது குத்தல், உடல் எரிச்சல், தேக குடைச்சல் ஆகிய அனைத்தும் குணமாகும்.
 
தூதுவளை சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
 
தூதுவளை நல்ல செரிமானத்தை அளிக்கக் கூடியது. எனவே அஜீரண கோளாறு உள்ளவர்கள் அடிக்கடி தூதுவளையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 
தூதுவளை இலையைப் பறித்து நன்கு சுத்தம் செய்து அதனுடன் மிளகு, சின்னவெங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கி துவையல் செய்து ஒரு மண்டலம்சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் இருமல், இரைப்பு, சளிமுதலியவை நீங்கும்.
 
தூதுவளைக் கீரையை சமையல் செய்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு வலு கொடுப்பதுடன் ஆண்மை சக்தியையும் அதிகரிக்கும். தூதுவளையில் கால்சியம் சத்து அதிகம் நிறைந்துள்ளதால் எலும்பையும்,பற்களையும் பலப்படுத்தும். அதனால் தூதுவளை கீரையை பருப்புடன் சேர்த்துசமைத்து நெய் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
 
வாத, பித்தத்தால் ஏற்படும் நோய்களை குணப்படுத்த மிளகு கற்பம் 48 நாட்கள்சாப்பிட்டபின், தூதுவளைக் கீரை சமையல் 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் வாத,பித்த நோய் தீரும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மருத்துவகுணம் அதிகமுள்ள அரியவகை மூலிகை சிவக்கரந்தை !!