சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை மயிர்ப் புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து மயிர் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.
* மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன்படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் நைய இடித்து கசாயமிட்டு அருந்தி வந்தால் சகல விசக்கடிகளும் முறியும்.
* மிளகுத்தூளை தேன் கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் உடனே நிற்கும். தேனுக்குப் பதில் பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்.
* சாதாரண ஜலதோசத்திற்கும் காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.
* 10 துளசி இலைகளுடன் ஐந்து மிளகைச் சேர்த்து 200 மி.லி நீர் விட்டு கொதிக்க வைத்துக் குடித்து வந்தால் கோழை கட்டுதல் நீங்கும்.
* முகப்பருக்களால் அவதிப்படுபவர்கள் சந்தனம், ஜாதிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்துப் பருக்களின்மீது பற்றுப்போட்டு வந்தால் நாளடைவில் உதிர்ந்துவிடும்.
* மார்பகப் புற்றுநோய் மற்றும் கேன்சர் கட்டிகள் வளர்ச்சியை தடுப்பது மிளகு. மிளகுடன் மஞ்சள் சேர்த்தால் புற்றுநோய் எதிர்ப்புப் பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
* பல்வலி, சொத்தைப்பல், ஈறுவலி, ஈறுகளில் ரத்தம் வடிதல், வாய் துர்நாற்றம் போன்ற பிரச்சினைகளுக்கு மிளகுத்தூளும் உப்புத்தூளும் சேர்த்துப் பல் துலக்கினால் பலன் கிடைக்கும்.
* அதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.