Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கை கால்களில் ஏற்படும் கருமையை போக்க எளிய இயற்கை மருத்துவம்...!

Advertiesment
கை கால்களில் ஏற்படும் கருமையை போக்க எளிய இயற்கை மருத்துவம்...!
நீர்ச்சத்துக் குறைவால் சருமம் வறண்டுபோவதால், இறந்த செல்கள் தேங்கி இப்பகுதிகள் கறுத்துவிடுகின்றன. மூட்டுத்தோல் பகுதி ஆரோக்கியமாக, இயல்பான நிறத்தில் இருக்க சில எளிய விஷயங்களைச் செய்தாலே போதும்.
கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சப்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.
 
உருளைகிழங்கு துண்டுகளை சருமத்தின் கருமை மற்றும் தழும்புகள் நிறைந்த இடங்களில், முட்டிகளின் கருமை நிறைந்த பாகங்களில் பூசி 15-30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். இது சருமத்தின் கருமையை போக்கி, உடல் பொலிவை ஏற்படுத்த உதவும்.
 
முகம், கழுத்து கை, கால் என மற்றவர்கள் பார்வையில் படும் பகுதிகள் அழகாகத் தெரிய வேண்டும் என்று ஃபேஷியல், பிளீச்சிங், மெடிக்யூர், பெடிக்யூர் செய்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறோம். ஆனால்  நம் கண்களுக்கு அதிகம் தெரியாத பகுதி என்பதால், கை மூட்டு, கால்  மூட்டுப் பகுதிகளுக்கு பலரும் முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.
 
மூட்டுப்பகுதியை மசாஜ் செய்வதன் மூலம் ரத்த ஓட்டத்தை சீர்செய்ய முடியும். ரத்த ஓட்டம் சீரானால் கறுப்புத் திட்டுக்கள் மறையும். தேங்காய் எண்ணெயை மூட்டுப் பகுதியில் விட்டு, 5-10 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்தால், நல்ல பலன் தெரியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா...?