Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இத்தனை அற்புத மருத்துவ குணங்களை கொண்டதா ஆலிவ் ஆயில் !!

Webdunia
செவ்வாய், 10 மே 2022 (12:54 IST)
ஆலிவ் ஆயிலை தினமும் சமையலில் சேர்த்து கொள்ள நம் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடலாம். இதில் உள்ள நல்ல கொழுப்புக்கள் நம்மை மன அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும்.


ஆலிவ் ஆயில் உபயோகிக்கும்போது மூளையில் அல்சைமர் எனும் ஞாபக மறதி நோய் குணமாகும். இது நம்முடைய மூளையில் ஏற்படும் அளவுக்கதிகமான புரத படலத்தை தடுக்கிறது. இதனால் ஞாபக மறதி ஏற்படும் அபாயம் தடுக்கப்படுகிறது.

தினமும் ஆலிவ் ஆயிலை உபயோகிப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள் மற்றும் வைட்டமின் ஈ சத்துக்கள் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இதனால் நம்முடைய இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

ஆலிவ் ஆயில் ஒரு மிகச்சிறந்த ஆண்டி ஆக்ஸிடண்ட்டாக செயல்படுகின்றது. நேயை எதிர்த்து போராடும் சக்தி ஆலிவ் ஆயிலிற்கு இயற்கையாகவே உள்ளது. இதனால் நோயை உண்டாக்கும் கிருமிகளை ஆரம்பத்திலேயே எதர்த்து போராடி அழிக்கும்.

தினமும் ஆலிவ் ஆயில் எடுத்துக்கொள்வதால் உடல் எடை குறையும். ஆலிவ் ஆயிலை சுடு தண்ணீரில் கலந்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து தினமும் காலை பருகி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும்.

இயற்கையாகவே ஆலிவ் ஆயிலிற்கு செரிமானத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. செரிமான மண்டலத்தை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும் திறன் ஆலிவ் ஆயிலிற்கு உள்ளது. இதனால் செரிமானப் பிரச்சணை இருப்பவர்கள் ஆலிவ் ஆயிலை தொடர்ந்து உபயோகிக்கலாம்.

ஆலிவ் ஆயிலை உபயோகித்தால் நம்முடைய எலும்புகளுக்கு சக்தியை தரும் கால்சியத்தின் அளவை அதிகரிக்கும். இதில் உள்ள ‘ஒலெயூரோபின்’ சத்துக்கு நம்முடைய எலும்பை வலுவாக்கும் சக்தி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெண்கள் அவசியம் செய்ய வேண்டிய 9 மருத்துவப் பரிசோதனைகள்!

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

பெண்களை அச்சுறுத்தும் எலும்புத் தேய்மானம்: தடுப்பது எப்படி?

மாரடைப்பு வருவதற்கு முன் வரும் அறிகுறிகள் என்ன?

மூல நோய் – காரணங்கள் மற்றும் இயற்கை நிவாரணங்கள்

அடுத்த கட்டுரையில்
Show comments