Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் நுங்கு !!

Advertiesment
கோடையில் ஏற்படும் உடல் உஷ்ணத்தை தணிக்கும் நுங்கு !!
நுங்கில் அதிக அளவு வைட்டமின் பி, சி, இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டசியம், தயமின், அஸ்கார்பிக் அமிலம் மற்றும் புரதம்  போன்ற சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. 

இந்த பனைமர பதநீரைவிட, தென்னைமர பதநீர் போதை அதிகம் தரும். ஆனால் சுவையில் பனைமர பதநீரை மிஞ்சமுடியாது.
 
நுங்குக்கு, கொழுப்பைக் கட்டுப்படுத்தி, உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் உணவுக் கட்டுப்பாட்டுடன், நுங்கை அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். 
 
பதநீர் நம் ஊர் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற, மிகச் சிறந்த இயற்கை பானம். உடல் உஷ்ணத்தை உடனே தணித்து உடலைக் குளிரவைக்கும் தன்மை கொண்டது. 
 
ரத்தசோகை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் விரைந்து குணமாகி உடல் சுறுசுறுப்பாகும்.
 
வெயில் காலத்தில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளில் இருந்தும், நம் உடலை பாதுகாக்கும் சத்துக்கள் இதில் அதிகம். பேன் தொல்லை இருப்பவர்கள், பதநீரைத்   தலையில் தேய்த்துக் குளிக்கலாம்.
 
நுங்கை இளநீருடன் ஜூஸ் போல அருந்தலாம். சருமமும் உடலும் பொலிவடையும். பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டியுடன், சுக்கு சேர்த்துச்  சாப்பிட்டால், நன்றாக பசி எடுக்கும்.
 
வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது நுங்கு. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் அன்னாசிப்பழம் !!