Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பொடுகு பிரச்சனையை போக்க உதவும் வேப்பிலை !!

Neem
, திங்கள், 8 ஆகஸ்ட் 2022 (13:55 IST)
வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்சனை உருவாக முக்கிய காரணங்கள் ஆகும்.


வேப்ப மரத்திலிருந்து வேப்பிலை பறித்து வைத்துக்கொண்டு, அதை நன்றாக அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அந்த  வேப்பிலை பொடியில் எலுமிச்சை பழத்தை  பிழிந்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளுங்கள்.

பின்னர் அந்த வேப்பிலை கலவையை பொடுகுள்ள  தலையின் வேர்களில் படும்படி தடவி 30 நிமிடங்கள் காய விட்ட  பின் தலைக்குக் குளித்துவந்தால் பொடுகு பிரச்சினை மாயமாய் மறைந்து விடும்.

வேப்பிலை பொடியுடன் செம்பருத்தி பொடியை மிக்ஸ் செய்து ,அதனுடன் தயிர் சேர்த்து பொடுகுள்ள தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் பொடுகு மறைந்து விடும்.

கைப்பிடி வேப்பிலைகளை பேஸ்ட்போல அரைத்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து ஊறவைத்து, 10 நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும். இதன் கசப்புத் தன்மை, தலையில் உள்ள பாக்டீரியா போன்ற தீங்கிழைக்கும் நுண்ணியிரிகளை அழித்துவிடும்.

வேப்பிலையை ஒரு தண்ணீர் பானையில் போட்டு கொதிக்க விட்டு ,அந்த தண்ணீரில் குளித்து வாருங்கள். பின்னர் நன்றாக தலையை வேப்பம் இலை அவித்த நீரில் கழுவி விட்டு துண்டு ஒன்றினால் தலையை கட்டிக் கொள்ளுங்கள். 1 மணி நேரத்தின் பின் துண்டை கழட்டி விடலாம். மறுநாள் வரை தலை குளிக்காமல் இருந்தால் பொடுகு, பேன் அனைத்தும் பறந்து போய் விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சுவையான முறையில் மீன் கட்லெட் எப்படி செய்வது...?