பஞ்ச பூத சக்திகளை ஒருங்கிணைத்து உடலில் நோய்வாய்ப்பட்ட இடத்தில் பிடிக்கும் போது அந்த இடத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதே இந்த முத்திரையின் தத்துவமாகும். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டவர்கள் முகுள முத்திரையை தொடர்ந்து 30 நாட்கள் செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
செய்முறை:
விரிப்பில் நிமிர்ந்து அமரவும். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். இயல்பாக நடக்கும் மூச்சை பத்து வினாடிகள் கவனிக்கவும். பின் பெருவிரல் நோக்கி மற்ற விரல்களை குவித்து படத்தில் உள்ளதுபோல் மேல்நோக்கி வைக்கவும். இரு கைகளிலும் செய்யவும். இரண்டு நிமிடங்கள் காலை, மதியம், மாலை மூன்று வேளைகள் செய்யவும்.
வெகு இலகுவான முத்திரைகளில் இதுவும் ஒன்று. நான்கு விரல் நுனிகளையும் பெருவிரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடிக்க வேண்டும்.
நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மனசக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையும்.
நான்கு விரல் நுனிகளையும் பெரு விரல் நுனியுடன் இணைப்பதே முகுள முத்திரை. அதிகமாக அழுத்தம் தராமல் சற்று தளர்வாக பிடித்தல் வேண்டும்.
பலன்கள்:
நமது உடலில் ஏதாவது ஒரு பாகம் நோய்வாய்ப்பட்டிருந்தால் அந்த பகுதியில் இந்த முத்திரையைப் பிடித்து ஐந்து நிமிடங்கள் வரை மன சக்தியை அந்த உறுப்பின் மேல் செலுத்துவதன் மூலம் அந்த உறுப்பு உறுதி அடைவதுடன் நோயும் படிப்படியாகக் குறையுமாம்.