Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இயற்கையான முறையில் உதட்டின் கருமையை போக்க...!

Webdunia
சிலருக்கு உதடுகள் கருமையாக இருப்பது பெரும் கவலையாக இருக்கும். அதனை போக்க, பீட்ரூட் சாறு அல்லது  புதினா இலை சாறு அல்லது மாதுளை சாறு எடுத்து உதடுகளில் பூசி வர உதடுகள் சிவப்பாக மாறிவிடும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு கலந்து அல்லது புதினா இலையை காய வைத்து அதனை தூளாக்கி இந்த தூளில்  பல் தேய்த்தால் பற்கள் பளிச்சென்று இருக்கும்.
 
மருத்துவ குணம் அதிகம் நிறைந்த தேன், உதட்டில் உள்ள கருமையை போக்க உதவும். அதற்கு பாதாம், ஓட்ஸ்,  எலுமிச்சை சாறு மற்றும் தேன் ஆகியவற்றை நன்கு அரைத்து, உதட்டில் தடவி, 5 நிமிடம் ஊற வைத்து, பின்  நீரில் அலச வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், உதட்டில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, உதடு  பொலிவாக இருக்கும்.
 
தினமும் உதட்டிற்கு பாதாம் பால் அல்லது பாதாம் எண்ணெயை பலமுறை தடவ வேண்டும். இதனால் சிகரெட் பிடிப்பதால் ஏற்படும் வறட்சியின் காரணமாக உண்டாகும் கருமை நிறத்தை மாற்றலாம்.
 
மாதுளை சாற்றினை தினமும் இரவில் படுக்கும் போது தடவி வந்தால், உதட்டில் உள்ள கருமையை போக்கலாம்.
 
எலுமிச்சை ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். இத்தகைய எலுமிச்சையின் சாற்றை மட்டும் உதட்டில் தடவி, 4-5  நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவி, இறுதியில் லிப் பாம் போட்டுக் கொண்டால், உதட்டில் இருக்கும்  கருமை நீங்கும்.
 
பொதுவாக கருமையைப் போக்க தயிர் சிறந்த பொருள். அதிலும் உதட்டில் உள்ள கருமையை போக்குவதற்கு,  தயிரை உதட்டில் தடவி, மசாஜ் செய்து ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நாளடைவில் உதட்டில் உள்ள கருமை நீங்கி, மென்மையாக இருக்கும்.
 
வெண்ணெய்: கருமையான உதடுகள் இருப்பதற்கு வறட்சியும் ஒரு காரணம். எனவே வறட்சியைப் போக்குவதற்கு  உதட்டிற்கு வெண்ணெய் தடவி வந்தால், உடனே உதட்டின் வறட்சி நீங்கி, நிறம் மாறுவதைக் காணலாம்.
 
ரோஸ் வோட்டர் உதட்டில் ஏற்படும் கருமையை போக்க சிறந்தது. ரோஸ் வோட்டரை சிறிது பஞ்சில் நனைத்து  உதட்டை சுற்றிலும் தடவி இரவில் படுக்கச் செல்லுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் ஒரு சில  வாரங்களில் கருமை மறைந்து சிவப்பாகும்.

தொடர்புடைய செய்திகள்

கர்ப்ப காலத்தில் மார்பகங்களில் நீர் கசிவது ஏன்?

அதிகரிக்கும் கோடை வெயில்.. 24 கோடி குழந்தைகளுக்கு ஆபத்து! – இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு யுனிசெஃப் எச்சரிக்கை!

ஜிம்முக்கு செல்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய அம்சங்கள் என்னென்ன?

மக்களே உஷார்! தர்பூசணியை சிவப்பாக்க ரசாயனம் கலப்பு!?

பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கான மேம்பட்ட கிளினிக்-ஐத் தொடங்கும் ரேலா மருத்துவமனை!

அடுத்த கட்டுரையில்
Show comments