Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் குடைமிளகாயை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்...!

அன்றாட உணவில் குடைமிளகாயை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் பலன்கள்...!
குடைமிளகாயில் வைட்டமின் சி சத்து அதிகமுள்ளது. மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ, ஈ, பி6 போன்ற சத்துக்கள் ஆரோக்கியமான  தேகத்தைக் கொடுக்கும்.
குடைமிளகாய் வயது முதிர்வை தடுக்கும் தன்மை கொண்டது. புற ஊதாக்கதிர்களால் தோலில் ஏற்படும் கருமை, சுருக்கம், வறட்சியை போக்கி தோலுக்கு ஆரோக்கியம் தருகிறது.
 
பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு உள்ளிட்ட சத்துக்கள் இதில் இருக்கிறது. குடை மிளகாயை பயன்படுத்தி வயிறு உப்புசம், வாயு தொல்லை  பிரச்சனையை போக்கும் மருந்து தயாரிக்கலாம். 
 
உடல் எடையைக் குறைக்க, குடமிளகாயை உணவில் சேர்த்து வர நல்ல பலனளிக்கும். குடைமிளகாயில் கொழுப்புச் சத்து, கொலஸ்ட்ரால்,  சோடியம் ஆகியன குறைவாகவே இருப்பதால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
 
குடைமிளகாயில் நிறைந்துள்ள வைட்டமின் சி சத்து தலைமுடியின் ஆரோக்கியத்தை பராமரித்து, தலைமுடி நுனியில் ஏற்படும் பிளவை  தடுக்கிறது.
 
கண்பார்வை சிறப்பாக்கவும், இளமையிலேயே கண் தொடர்பான பிரச்சினைகள் வராமலும் குடைமிளகாய் காக்கிறது. குடைமிளகாய், மிளகு  ஆகியவை உடலில் சர்க்கரை சத்தை அழிப்பதில் பெரிதும் உதவுகிறது.
 
தினமும் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் அஜீரணத்தை விரட்டலாம். நீரிழிவு நோயிலிருந்து விடுபட இது ஒரு சிறந்த மருந்து. இதை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் அடிக்கடி சாப்பிட்டு வந்தால், உடலில் சர்க்கரையின் அளவு குறையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நரகாசுரன் அழிவை கொண்டாடும் தீபாவளி பண்டிகை....!