Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சகலவிதமான உடல்சூட்டையும் தணிக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!

Advertiesment
சகலவிதமான உடல்சூட்டையும் தணிக்கும் இயற்கை மருத்துவ குறிப்புகள் !!
வெந்தயத்தை தண்ணீரில் இரவு ஊறவைத்து, காலையில் அந்நீரை அருந்திவந்தால் உடல் வெப்பமடைவதைத் தடுக்கலாம்.


தேன், கல்கண்டு, ரோஜா  இதழ்கள் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
 
பரங்கிக்காயில் வைட்டமின்கள் பி, சி ஆகிய சத்துக்கள் உண்டு. இதை சாப்பிட்டால் உடம்பு சூடு நீங்கும், பித்தம் போகும், பசியைத் தூண்டும். மாதுளம்பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டுநோய்கள் நீங்கும். உடல் குளிர்ச்சியடையும்.
 
நல்லெண்ணெய்யையும், அகத்திக்கீரைச் சாற்றையும் சம அளவு கலந்து அடுப்பிலேற்றி, பாலில் அரைத்த வெந்தயத்தையும் சேர்த்து தைலம் பதமாக காய்ச்சி வைத்துக்கொண்டு தலைமுழுகிவந்தால் சகல சூடும் தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.
 
சோற்றுக் கற்றாழையைக் கீறி உள்ளே இருக்கும் சதைப்பகுதியை தலையில் தேய்த்துக் குளிக்க உடல் சூடு குறையும். இதை மோரிலோ அல்லது  நீராகாரத்திலோகலந்து சாப்பிட குடல் சூடு, மூலம், உடல் எரிச்சல் குறையும்.
 
நெல்லி வற்றலை ஊறவைத்து தலைக்குத் தேய்த்து வர சூடு நீங்கும். கரிசிலாங்கண்ணிச் சாற்றை நேரடியாகத் தலையில் தேய்த்துக் குளிக்கமூளைக்கு நல்ல குளிர்ச்சி கிடைக்கும். நல்ல உறக்கம் வரும்.
 
கொத்தமல்லி இலையுடன் கறிவேப்பிலை, புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, தேங்காய் சேர்த்து துவையல் செய்து உண்டு வந்தால் உடல் சூடுதணிவதுடன், பித்த அதிகரிப்பினால் உண்டாகும் பித்தச்சூடும் தணியும்.
 
வெந்தயத்தை சுத்தமான தேங்காய் எண்ணெய்யில் ஊறவைத்து தலையில் தடவி வரஉடல் வெப்பம் குறையும். அகத்திக்கீரையை பொறியல், கூட்டு, சூப் என்று செய்து சாப்பிட்டு வந்தால் உடல் வெப்பம் குறையும்.
 
மணத்தக்காளிக் கீரையை வெங்காயம், சீரகம், உப்பு சேர்த்துக் கழுநீரில்பானம் செய்து சாப்பிட உடல் சூடு குறைந்து நிவாரணம் கிடைக்கும். ரோஜா இதழ்களை இடித்து, சீயக்காயுடன் சேர்த்து தலைக்குத் தேய்த்தால் உடல் குளிர்ச்சியடையும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முடி நன்கு ஆரோக்கியமாக கருமை நிறத்துடன் வளர குறிப்புகள் !!