மொச்சை கொட்டையில் வெள்ளை மொச்சை, கருப்பு மொச்சை, சிவப்பு மொச்சை, மர மொச்சை, நாட்டு மொச்சை என பல வகைகள் இருக்கின்றன.
மொச்சைக் கொட்டையில் குறிப்பிட்ட அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், போலேட் மற்றும் சபோனின் போன்றவை உள்ளன.
பெரும்பாலோனார் மொச்சையை சாப்பிட்டால் வாயுத் தொல்லை ஏற்படும் என்ற காரணத்தினால் ஒதுக்கி வைக்கின்றனர். இது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மொச்சையை ஒதுக்கி வைக்கவேண்டிய அவசியம் இல்லை. அதற்கு பதில் மொச்சையை வேகவைக்கும் போது இஞ்சி, பூண்டு சேர்த்து சமைத்தால் வாய்வுத்தொல்லை ஏற்படாது.
மொச்சையில் உள்ள கரையாத நார்ச்சத்து, சிறந்த மலமிளக்கியாக செயல்படுகிறது. இதனால் மலச்சிக்கலுக்கான வாய்ப்பு குறைக்கிறது.
மொச்சை கொட்டை நமது உடலுக்கு தேவையான புரதம், நார் சத்துகள், மினரல்ஸ் போன்றவற்றை அதிகமாக கொண்டிருக்கிறது. மொச்சையின் விதைகள் பச்சையாகவும், காய வைக்கப்பட்ட பிறகும் சமைத்து சாப்பிடப்படுகிறது.
மொச்சைக் கொட்டையில் அதிக அளவு புரதச் சத்து உள்ளது. உடலின் அனைத்து செயல்பாடுகளையும் கட்டுப்படுத்த புரதம் உடலுக்கு மிகவும் அவசியம்.
மொச்சை கொட்டை உடலில் உள்ள கொழுப்புகளை குறைத்து கலோரிகளை எரிக்கும். இதன் காரணமாக உடல் எடை வேகமாக குறையும்.