Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வில்வ இலையில் மருத்துவ பயன்கள்....!

Advertiesment
வில்வ இலையில் மருத்துவ பயன்கள்....!
இந்த மரம் தெய்வீக மூலிகை மரம். கோவில் தோரும் இந்த மரத்தை வைத்திருப்பார்கள். இதன் இலை இறைவனுக்கு வழிபாடு செய்யப் பயன்படும். வில்வமர நிழல், காற்று இவற்றிலும் மருத்துவ சக்தி இருக்கிறது.
மருத்துவப் பயன்கள்: 
 
இதன் வேர் நோயை நீக்கி உடல் தேற்றும், சதை நரம்புகளைச் சுருங்கச் செய்யும். குருதிக் கசிவை நிறுத்தும். பழம்  மலமிளக்கும். நோய் நீக்கி உடல் தேற்றும். பழ ஓடு காய்ச்சல் போக்கும். தாது எரிச்சல் தணிக்கும். பிஞ்சு விந்து வெண்ணீர்க்  குறைகளையும் நீக்கும். பூ மந்தத்தைப் போக்கும்.
 
வில்வத் தளிரை வதக்கிச் சூட்டுடன் கண் இமைகளில் ஒற்றடம் வைக்க கண் வலி, கண் சிகப்பு, அரித்தல் குணமாகும். இதன்  இலை காச நோயைத் தடுக்கும். தொற்று வியாதிகளை நீக்கும். வெட்டை நோயைக் குணமாகும். வேட்டைப் புண்களை ஆற்றும்.  பித்தத்தைப் போக்கும். வாந்தியை நிறுத்தும். உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
 
இதன் பூ வாய் நாற்றத்தைப் போக்கும். விஷத்தை முறிக்கும். பழம் விஷ நோய்களைத் தடுக்கும் மலக்கட்டை ஒழிக்கும், நாக்கு  புண்களை ஆற்றும். உடல் வலுவைக் கொடுக்கும். பட்டை வாத சுரத்தைத் தணிக்கும். முறைக் காச்சலைத் தடுக்கும். நெஞ்சு  வலியைப் போக்கும்.
 
வாய்புண், குடல் புண் போன்ற நோய்களையும் தீர்க்க வல்லது காசநோயை குணமாக்கும். சளி, தடிமன், மூக்கடைப்பு, கண்  எரிச்சல் போன்ற வற்றையும் குணமாக்கும் வில்வப் பழம்.
 
வில்வ மரத்தின் கொழுந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் புற்று நோய் அடியோடு நிற்கும் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.  வில்வப் பழமும் எள் எண்ணெயும் சேர்த்து தைலத்தை சிறிது விளக்கில் சூடாக்கி காதில் விட்டு பஞ்சால் அடைக்க வேண்டும்  நாளடைவில் செவி நோய்கள் நீங்கிவிடும்.
 
வில்வக் காயை வெய்யிலில் நன்கு காயப்போட்டு அதை எரித்துக் கரியாக்கி இடித்து பொடிசெய்து தினம் பல் துலக்கி வந்தால்  பற்களில் உண்டாகும் பல நோய்கள் போம்.
 
ஒருபிடி வில்வ இலையை சிறிது நீரில் ஊற வைத்திருந்து எட்டு மணி நேரம் சென்று, நீரிலுள்ள இலைகளை எடுத்து விட்டு  நீரை மட்டும் அருந்தினால் தீராத வயித்து வலி தீரும், உடல் நலம் பெறும். ஒரு அவுன்ஸ் வீதம் அருந்தி வந்தால் வாத  வலிகள் மேக நோய் போன்றவை குணமாகும்.
 
வில்வ இலையையும் பசுவின் கோமையத்தையும் சம அளவு எடுத்து ஊற வைத்து, இடித்துச் சாறு பிழிந்து வடிகட்டி தினமும்  அதிகாலையில் ஒரு டம்ளர் நீர் அருந்தி வந்தால் சோகைநோய் மாறும் பாண்டு வியாதி பறந்தோடும்.
 
வில்வ காயுடன் இஞ்சி, சோம்பு நசுக்கி குடிநீரிட்டு வழங்க மூல நோய் நாளடைவில் குணப்படும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எலும்புகளை வலுப்படுத்த உதவும் கொள்ளு பீட்ரூட் சப்பாத்தி