Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எளிதாக கிடைக்கக்கூடிய குப்பைக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

எளிதாக கிடைக்கக்கூடிய குப்பைக்கீரையில் உள்ள ஏராளமான நன்மைகள் !!
, வியாழன், 13 ஜனவரி 2022 (13:04 IST)
குப்பைக் கீரையுடன் மிளகு, சீரகம் இரண்டையும் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால், நன்றாகப் பசி எடுக்கும். குப்பைக் கீரையுடன் சீரகம் (சிறிதளவு) சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் நீர்க்கடுப்பு மறையும்.


குப்பைக் கீரையுடன் பூண்டு, சீரகம், மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து, கஷாயமாக்கிக் குடித்தால் வாயுக் கோளாறுகள் குணமாகும். குப்பைக்கீரை, முடக்கறுத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து சூப் செய்து சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும்.

குப்பைக் கீரையுடன் மஞ்சள் தூள், அரை டீ ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக காய்த்து அந்த சாற்றை பருகினால் நெஞ்சு எரிச்சல் குணமாகும். குப்பை கீரையை உடலில் ஏற்படும் கட்டிகள், தழும்பு, மரு, முகப்பரு ஆகியவற்றின் மீது அரைத்து பூசிவந்தால் கட்டிகள் கரைந்து குணமாகும்.

அடிபட்ட இடங்களில் வீக்கம் ஏற்பட்டால் குப்பைக் கீரையை அரைத்து மஞ்சள் சேர்த்து பூசி வந்தால் வீக்கம் குறையும். நரம்புத் தளர்ச்சி உடையவர்கள் குப்பை கீரையை சாப்பிட்டு வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.

விஷ ஜந்துக்களான பாம்பு மற்றும் தேள் கடிக்கு விஷ முறிவு மருந்தாக குப்பை கீரை விளங்குகிறது. குப்பை கீரையானது பசியைத் தூண்டும், குடலை சுத்தமாக்கும், மலச்சிக்கல் ஏற்படாமல் முதலிய நோய்கள் குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீராவி பிடிப்பதால் என்னவெல்லாம் நன்மைகள் உண்டு தெரியுமா...?