பீன்ஸ் வகைகள் அனைத்துமே அதிகளவு நார்ச்சத்து கொண்டிருக்கிறது. உடலில் இருக்கும் கொழுப்பை கரைத்து அதை வெளியேற்றுகிறது. பீன்ஸை தொடர்ந்து எடுத்துகொள்ளும் போது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கிறது.
நமது உடலை சீராக இயங்கச் செய்ய இதயத்தின் பங்கு மிக முக்கியமானது. இதயத்தை பாதுகாக்கும் காய்கறிகளில் நாம் பார்க்கபோவது பீன்ஸ். பீன்ஸை குழம்பில் போட்டு சாப்பிடுவதை விட பொரியல் செய்து சாப்பிடுவதே மிகச்சிறந்தது.
வேகவைத்த காய்கறிகளை தான் மனிதன் உடல் எளிதில் ஜீரணிக்கும். அப்படி ஜீரணமாவதால் தான் உடலுக்கு அனைத்து சத்துகளும் கிடைக்கும். பீன்ஸ்சில் உள்ள இரும்பு, கால்சியம், மக்னீசீயம், மாங்கனீசு, மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துகளை கொண்டுள்ளது.
இருதய படபடப்பு, மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீன்ஸை உணவில் சேர்த்துக்கொள்வதால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகித்து உயர் ரத்த அழுத்தம் மற்றும் இருதய படபடப்பை நீக்கி உடலை பாதுகாத்துக்கொள்ளும். கொழுப்பின் அளவு ரத்தத்தில் அதிகம் உள்ளவர்கள் பீன்ஸை பொரியலை செய்து தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் உள்ள லெசித்தின் எனும் நார்ப்பொருள் இருதய டானிக்காக செயல்படுவதோடு ரத்தத்தில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தை சுத்தமாக்கும்.
ரத்தகுழாய்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை நீக்கி இருதய அடைப்பு மற்றும் இருதய சம்பந்தமான நோயிலிருந்து உடலை பாதுகாக்கலாம். மேலும் நீரிழிவால் அவதிபடுபவர்கள் உணவில் அடிக்கடி பீன்ஸை எடுத்துக்கொள்வதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுபடுத்தப்படும். இதனால் நோயின் தாக்கம் குறையும்.
பீன்ஸ் காய்கறி இதயத்திற்கு செல்லும் நரம்புகளை வலுப்படுத்தி ரத்தம் சீராக செல்வதற்கு வழிவகுக்கிறது. இதயம் ஆரோக்கியமாக இருக்கும். குழந்தை பிறந்த பிறகு கர்ப்பிணிப் பெண்களுக்கு உடலுக்கு தேவையான சத்தினை பீன்ஸ் கொடுக்கிறது. உடல் சோர்வடையாமல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.